Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிலாக்சா இருப்பாரு... எல்லார் மேலயும் நம்பிக்கை வைப்பாரு... யாரப்பத்தி பின்ச் இப்படி சொல்ராரு?

சிட்னி : ஆர்சிபி வீரர்கள் மீது அதிகமாக நம்பிக்கை வைத்து கேப்டன் விராட் கோலி செயல்படுவார் என்று ஆஸ்திரேலிய குறைந்த ஓவர்கள் வடிவத்தின் கேப்டன் ஆரோன் பின்ச் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்துள்ள ஐபிஎல் 2020 சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய ஆரோன் பின்ச், அணி வீரர்களிடம் அதிகமான நேரத்தை கோலி செலவழிப்பார் என்றும் கூறியுள்ளார்.

Virat Kohli was very confident about everyone -Aaron Finch Surprised

அவர் அணி வீரர்கள் மீது எவ்வாறு இவ்வளவு நம்பிக்கையுடன் உள்ளார் என்று தான் ஆச்சரியப்பட்டதாகவும் பின்ச் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டின் கேப்டன் ஆரோன் பின்ச் நடந்து முடிந்துள்ள ஐபிஎல் 2020 சீசனில் கேப்டன் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணிக்காக விளையாடினார். இந்நிலையில் தன்னுடைய அணி வீரர்கள் மீது விராட் கோலி எப்போதும் அதிகளவில் நம்பிக்கை கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாம் சிறப்பாக விளையாடினால் வெற்றி பெறலாம் என்பதை வீரர்களுக்கு அடிக்கடி அறிவுறுத்துவார். மேலும் வீரர்களுடன் அதிகளவில் நேரத்தை செலவழிப்பார், ரிலாக்சாகவும் அணியில் சிறப்பாகவும் அவர் செயல்படுவார் என்றும் பின்ச் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் அவர் அணி வீரர்களிடம் எவ்வாறு இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது குறித்து தான் எப்போதும் ஆச்சரியப்படுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார் பின்ச்.

Story first published: Monday, December 14, 2020, 12:49 [IST]
Other articles published on Dec 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+