காக்க..காக்க..கனகவேல் காக்க.. விராட் கோலியின் அபார உடற்பயிற்சி.. மனைவியுடன் செய்த சாகசம்..வீடியோ இதோ
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
ஐபிஎல் 2022 வது சீசனில் விராட் கோலி தனது பழைய ஃபார்மை மீட்க முடியாமல் போராடி வருகிறார்.
கடந்த போட்டியில் அரைசதம் விளாசி இருந்தாலும், விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாகவே இருந்தது.

இதனால் விராட் கோலி கடுமையான நெருக்கடிக்கு ஆளாகி வருகிறார். அவரை விட தற்போது இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவது அவருக்கு அழுத்தத்தை தந்துள்ளது. விராட் கோலி போன்ற வீரரின் இடத்துக்கு அவ்வளவு சீக்கிரம் ஆபத்து வராது ஆனால் இது கங்குலியையே நீக்கியே கிரிக்கெட் போர்ட் ஆச்சே.
இந்த நிலையில், தனது பழைய ஃபார்மை மீட்க விராட் கோலி பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். வலைப் பயிற்சியில் அவர் சிறப்பாக செயல்பட்டாலும், களத்தில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் இன்று முக்கிய ஆட்டத்தில் ஆர்சிபி அணியும், சிஎஸ்கே அணியும் மோதுகிறது.
இன்றைய ஆட்டத்தில் ஃபார்முக்கு திரும்பி , ரன் குவித்து தனது விமர்சகர்களுக்கு பேட் மூலம் பதிலடி தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக விராட் கோலி தனக்கு பிடித்தமான பளுதூக்கும் உடறபயிற்சியை மனைவி அனுஷ்கா சர்மாவுடன் மேற்கொண்டார். இரும்பு போல் தேகத்தை கொண்ட கோலி, பளுதூக்கி அதனை கீழே இறக்கும் காட்சியை பார்க்கும் போது நமக்கே உடற்பயிற்சி செய்ய வேண்டும் என ஆசை வந்துவிடும்.


Click it and Unblock the Notifications