Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி ஒரு சாதனை தவிர அனைத்தையும் முறியடிப்பார்.. ஸ்டீவ் வாஹ் சொல்லும் அந்த ஒன்று என்ன?

மும்பை : இந்திய அணியின் கேப்டன் மற்றும் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக தன் கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தில் இருக்கிறார்.

தொடர்ந்து ரன் குவித்து வரும் அவர், பல்வேறு பேட்டிங் சாதனைகளை முறியடித்துள்ளார்.

கோலி ஒரே ஒரு சாதனை தவிர மற்ற எல்லா பேட்டிங் சாதனைகளையும் முறியடித்து விடுவார் என கூறியுள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஸ்டீவ் வாஹ்.

கோலிக்கு கிரிக்கெட் மீது காதல் உள்ளது

கோலிக்கு கிரிக்கெட் மீது காதல் உள்ளது

ஸ்டீவ் வாஹ்-விடம் விராட் கோலியின் சமீபத்திய பேட்டிங் செயல்பாடுகள் மற்றும் அவர் சாதனைகளை முறியடித்து வருவது பற்றி கேட்கப்பட்டது. அது பற்றி பேசிய அவர், "விராட் கோலிக்கு ஆர்வம், பசி, உடற்தகுதி, தீவிரத்தன்மை மற்றும் விளையாட்டின் மீது காதலும் உள்ளது" என்றார்.

பிராட்மேன் சராசரி தவிர..

பிராட்மேன் சராசரி தவிர..

மேலும், "அவர் ஏதேனும் தீவிர காயம் ஏற்படாத பட்சத்தில், பிராட்மேனின் டெஸ்ட் சராசரி தவிர அனைத்து சாதனைகளையும் முறியடித்து விடுவார்" என குறிப்பிட்டார்.

ஜாம்பவான் பேட்ஸ்மேன் பிராட்மேன்

ஜாம்பவான் பேட்ஸ்மேன் பிராட்மேன்

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஜாம்பவான் பேட்ஸ்மேனாக விளங்கியவர் பிராட்மேன். அவர் டெஸ்டில் 99.99 பேட்டிங் சராசரி வைத்துள்ளார். இதை எந்த பெரிய பேட்ஸ்மேனும் இதுவரை நெருங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

28 ஒருநாள் சதங்கள்

28 ஒருநாள் சதங்கள்

கோலி கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து தன் வாழ்வின் உச்சகட்ட பார்மில் இருக்கிறார். 2016இல் இருந்து மட்டும் 28 ஒருநாள் போட்டி சதங்களை அடித்துள்ளார் அவர். அவர் மொத்தமாக அடித்துள்ள ஒருநாள் போட்டி சதங்கள் 38 என்பது குறிப்படத்தக்கது. சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் டெண்டுல்கரின் வேகமாக 10,000 ரன்கள் அடித்த சாதனையை முறியடித்து இருந்தார் கோலி.

Story first published: Wednesday, November 7, 2018, 18:01 [IST]
Other articles published on Nov 7, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+