Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசிகர்களின் 'வாவ்' கமெண்ட்... புதுவித வொர்க்-அவுட்டால் ரசிகர்களை கவர்ந்த விராட் கோலி

மும்பை : தன்னுடைய பிட்னசில் மிகுந்த கவனத்துடன் செயல்படுபவர் விராட் கோலி. வீட்டில் இருந்தாலும் தினந்தோறும் பலமணி நேரங்களை பிட்னஸ் பயிற்சிகளுக்காக செலவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது 180 லாண்டிங் வொர்க்-அவுட்டை செய்து கலக்கியுள்ளார் விராட் கோலி. இதற்கு ரசிகர்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பிட்னசில் ஜாம்பவானாக உள்ள விராட் கோலி தொடர்ந்து தங்களை ஊக்குவிக்கவும் ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

விராட் கோலி பெஸ்ட்

விராட் கோலி பெஸ்ட்

பிட்னஸ் விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டார் கேப்டன் விராட் கோலி. போட்டிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர் தொடர்ந்து பிட்னஸ் பயிற்சிகள் செய்து உடலை பிட்டாக வைத்துக் கொள்வார். தற்போது கொரோனா வைரஸ் ஊடரங்கு காரணமாக வீட்டில் முடங்கியிருந்தாலும் தொடர்ந்து பல்வேறு பிட்னஸ் பயிற்சிகளை செய்துவருகிறார் விராட் கோலி.

டீ வில்லியர்ஸ் ஆச்சர்யம்

டீ வில்லியர்ஸ் ஆச்சர்யம்

கடந்த வாரத்தில்கூட பளூ தூக்கும் பயிற்சியையும் கூடவே ஜம்பிங்கையும் சேர்த்து செய்த விராட் கோலி அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இதைகண்ட ஆர்சிபி வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் தன்னுடைய ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினார். ரசிகர்களும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்த தவறவில்லை.

வித்தியாசமான வொர்க்அவுட்

வித்தியாசமான வொர்க்அவுட்

இந்நிலையில் தற்போது 180 லாண்டிங் வொர்க் அவுட்டை செய்து அசத்தியுள்ளார் விராட் கோலி. இந்த வீடியோவை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஒருகாலை ஊன்றிக்கொண்டு மற்றொரு காலால் 180 டிகிரியில் குதித்துக்கொண்டே திரும்பி மற்றொரு காலை ஊன்றும்வகையில் இந்த பயிற்சி காணப்படுகிறது. மிகவும் கடினமானதாக இந்த பயிற்சி காணப்படுகிறது.

Recommended Video

Why Rohit Sharma Should be T20 Captain replacing Kohli?
ரசிகர்கள் கோரிக்கை

ரசிகர்கள் கோரிக்கை

இந்த வீடியோவை விராட் கோலி பகிர்ந்ததும், ரசிகர்கள் மிகவும் குஷியாகி விட்டனர். ஏராளமான லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன. பிட்னஸ் ஜாம்பவானான விராட் கோலி, இதேபோல தங்களை ஊக்குவிக்க ஒரு ரசிகர் கோரிக்கை விடுத்துள்ளார். மற்றொருவரோ, அவர் எதை செய்தாலும் அது தனித்துவமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, May 27, 2020, 13:17 [IST]
Other articles published on May 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+