Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேச வீரரை ஆடையை கழட்ட சொன்ன கோலி.. 2வது டெஸ்ட் போட்டியில் பரபரப்பு சம்பவம்.. என்ன நடந்தது?

டாக்கா: வங்கதேச அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் கோபத்தில் இருந்த விராட் கோலி, எதிரணி வீரர் ஷாண்டோவின் ஆடையை அப்படியே கழட்டிவிட சொன்னது ரசிகர்களிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்திய வீரர் விராட் கோலியை களத்தில் அமைதியாக இருக்க சொல்வது நடக்கவே நடக்காது காரியம் என்பது ரசிகர்கள் அனைவருக்குமே தெரிந்தது. அவரின் கோபத்திற்கு உள்ளாகிவிட்டால், அதன்பின்னர் எதிரணி வீரருக்கு தரமான பதிலடி நிச்சயம் காத்திருக்கும்.

அதே போன்ற ஒரு சம்பவம் தான் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் நடந்துள்ளது. இந்த போட்டி டாக்காவில் உள்ள மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

புதிய சர்ச்சை

புதிய சர்ச்சை

இந்த போட்டியின் 2வது நாளான நேற்று மாலை வங்கதேசம் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கி விளையாடியது. மாலை நேரத்தில் வெளிச்சம் குறைந்துக்கொண்டே வந்ததால் ஓவர்கள் மளமளவென போடப்பட்டது. ஆனால் எதிரணி வீரர் ஷாண்டோ செய்த காரியத்தால் அது நிறைவேறவில்லை. 6வது ஓவரின் 5வது பந்தின் போது திடீரென ஆட்டத்தை நிறுத்திய அவர், ஷூ லேஸினை கட்டுகிறேன் எனக்கூறிவிட்டு சிறிது நேரம் கீழே குனிந்துக்கொண்டு இருந்தார். இதனால் வெளிச்சமின்மை எனக்கூறி ஓவர் முடிவதற்குள்ளே ஆட்டம் முடிக்கப்பட்டது.

கோலி ஆத்திரம்

கோலி ஆத்திரம்

இதனால் ஆத்திரமடைந்த விராட் கோலி, எதற்கு ஷூ லேஸ் எனக்கூறி கொண்டு இருக்கிறாய், முடிந்தால் ஆடையையும் கழட்டிவிட்டு இன்னும் தாமதம் செய்யலாம், வீண் முயற்சிகள் வேண்டாம் எனக்கூறினார். இதனை வாய் வார்த்தை மட்டுமின்றி, செய்கையிலும் காட்டியதால் ரசிகர்களுக்கு அப்படியே தெரியவந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கெல்லாம் கோபமா?

இதற்கெல்லாம் கோபமா?

ஷூ லேஸ் கட்டியதற்கெல்லாம் கோபமா என்ற கேள்வி எழலாம். ஆனால் ஷாண்டோ அதற்கு முன்பு இன்னும் சில விஷயங்களையும் முயற்சி செய்தார். 2வது இன்னிங்ஸின் போது, ஷாண்டோ பேட்டை மாற்ற வேண்டும் எனக்கூறி கொண்டு வரச்சொன்னார். நிறைய பேட்கள் கொண்டு வந்து காட்டிய பிறகு, கடைசியில் தனது பழைய பேட்டையே மீண்டும் பயன்படுத்தினார். இதனால் அவர் நேரம் கட்டத்துவது தெளிவாக தெரிந்தது. இதுதான் கோலியின் கோபத்திற்கு காரணம்.

ஸ்கோரின் விவரம்

ஸ்கோரின் விவரம்

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 227 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இதன் பின்னர் ஆடிய இந்திய அணி 314 ரன்களை எடுத்தது. இதனால் 87 ரன்கள் பின்னடைவாக வங்கதேசம் 2வது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இதில் இந்தியாவுக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, December 24, 2022, 12:49 [IST]
Other articles published on Dec 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+