For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"2026-க்குள் நுழையும் ஸ்பைடர்மேன் கோலி".. அனுஷ்காவுடன் வெளியான புகைப்படம்.. 2026 புத்தாண்டு வாழ்த்து

மும்பை: 2025-ம் ஆண்டு முடிந்து 2026 புத்தாண்டு பிறக்கப்போகிறது. உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கும் இந்த வேளையில், இந்திய கிரிக்கெட் அணியின் 'கிங்' விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு புகைப்படம் இப்போது இணையத்தையே கலக்கி வருகிறது. களத்தில் பேட் பிடித்து ருத்ரதாண்டவம் ஆடும் கோலி, புத்தாண்டை முன்னிட்டு குழந்தையாக மாறி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் கொண்டாடிய விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஸ்பைடர்மேன் கோலி - பட்டாம்பூச்சி அனுஷ்கா

புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோலி பதிவிட்டுள்ள அந்தப் புகைப்படத்தில், கோலியின் முகத்தில் பாதி பக்கம் 'ஸ்பைடர்மேன்' போலவும், அனுஷ்கா சர்மாவின் முகத்தில் அழகான 'பட்டாம்பூச்சி' போலவும் ஃபேஸ் பெயிண்டிங் (Face Painting) செய்துள்ளனர்.

Virat Kohli s Cute New Year 2026 Celebration with Anushka Sharma Viral Photo
Photo Credit: instagram/Virat_kohli

அந்தப் புகைப்படத்திற்கு கீழ் கோலி பதிவிட்டுள்ள செய்தி தான் ரசிகர்களை ஈர்த்துள்ளது. "என்னுடைய வாழ்வின் ஒளியுடன் 2026-ல் அடியெடுத்து வைக்கிறேன்" என்று உருகியுள்ளார். இந்த புகைப்படம் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே வேகமாக பரவி, லைக்குகளை அள்ளி வருகிறது.

களத்தில் சாதனைக் கொண்டாட்டம்

ஒரு பக்கம் குடும்பத்துடன் கொண்டாட்டம் என்றால், மறுபக்கம் கிரிக்கெட் களத்திலும் கோலி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். டெல்லி அணிக்காக விஜய் ஹசாரே ட்ராபியில் விளையாடி வரும் அவர், இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளில் 131 மற்றும் 77 ரன்களை விளாசித் தள்ளினார்.

இதன் மூலம், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் (330) 16,000 லிஸ்ட் ஏ ரன்களைக் கடந்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை 2025-ன் இறுதியில் படைத்துள்ளார்.

அடுத்தது என்ன?

ஜனவரி 6-ம் தேதி பெங்களூருவில் நடைபெறவுள்ள ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் கோலி விளையாட ஆர்வம் காட்டி வருகிறார். இந்தப் போட்டியை முடித்துவிட்டு, ஜனவரி 11-ம் தேதி வதோதராவில் தொடங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க அவர் கிளம்புவார். நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி ஜனவரி 8-ம் தேதி கூடுகிறது. ஆனால் கோலி ஒரு நாள் முன்னதாகவே சென்று பயிற்சியைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 7-ம் தேதி டி20 உலகக்கோப்பை தொடங்கவுள்ளதால், பணிச்சுமை காரணமாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு நியூசிலாந்து ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட உள்ளது. ஆனால் கோலி, ரோஹித் போன்ற சீனியர்கள் களமிறங்குவது உறுதி. 2025-ஐ வெற்றியுடன் முடித்த கோலி, 2026-ஐயும் அதே வேகத்துடன் தொடங்குவார் என நம்புவோம்.

Story first published: Wednesday, December 31, 2025, 22:31 [IST]
Other articles published on Dec 31, 2025
English summary
Virat Kohli's Cute New Year 2026 Celebration with Anushka Sharma Viral Photo
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+