Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியின் லைக்.. வெட்கப்பட்டு மௌனம் கலைத்த இளம் நடிகை அவ்னீத் கௌர்.. என்ன சொன்னார்?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவறுதலாக இளம் நடிகை அவ்னீத் கௌரின் புகைப்படத்தை லைக் செய்தது இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. இதுகுறித்து பல மாதங்களாக அமைதி காத்து வந்த அவ்னீத் கௌர், தற்போது தனது மெளனத்தைக் கலைத்து, வெட்கத்துடன் புன்னகைத்தபடி பதிலளித்துள்ளார்.

சமீபத்தில், அவ்னீத் கௌர் தனது புதிய சர்வதேச திரைப்படமான 'லவ் இன் வியட்நாம்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர் ஒருவர், சமூக வலைதளங்களில் பிரபலங்களிடமிருந்து கிடைக்கும் அன்பு மற்றும் பாராட்டுக்கள் குறித்து அவரிடம் மறைமுகமாக விராட் கோலி விஷயத்தைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார்.

Virat Kohli s Instagram Like on Avneet Kaur s Photo Actress Finally Breaks Silence

இந்தக் கேள்விக்கு வெட்கத்துடன் புன்னகைத்த அவ்னீத், "இந்த அன்பு தொடர்ந்து கிடைக்கட்டும்... இதற்கு மேல் என்ன சொல்வது" என்று பதிலளித்தார். அவரது இந்த பதில், ரசிகர்களிடையேயும் ஊடகங்களிடமும் பல்வேறு ஊகங்களை எழுப்பி உள்ளது. விராட் கோலி தவறுதலாக தான் அவ்னீத் கௌர் புகைப்படங்களை லைக் செய்ததாக விளக்கம் அளித்து இருந்த நிலையில், அவ்னீத் அதை ஏன் வேறு மாதிரி கூறுகிறார்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

நடந்தது என்ன?

கடந்த ஏப்ரல் 30, 2025 அன்று, நடிகை அவ்னீத் கௌரின் ரசிகர் பக்கம் ஒன்றில், பச்சை நிற கிராப் டாப் மற்றும் பிரிண்டட் ஸ்கர்ட் அணிந்திருந்த அவரது புகைப்படம் பகிரப்பட்டது. இந்தப் புகைப்படத்தை விராட் கோலி லைக் செய்திருந்தார். இது சமூக வலைதளங்களில் ஸ்கிரீன் ஷாட்களாகப் பரவி, மீம்ஸ்கள் மற்றும் ட்ரோல்களால் இணையமே அதிர்ந்தது.

விராட் கோலியின் விளக்கம்

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், விராட் கோலி உடனடியாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளக்கம் அளித்தார். அதில், "நான் எனது பக்கத்தை சரி செய்யும்போது, அல்காரிதம் காரணமாக தவறுதலாக அந்த லைக் பதிவாகிவிட்டது. அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இதுகுறித்து தேவையற்ற யூகங்களை உருவாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அவ்னீத் கௌருக்கு அடித்த ஜாக்பாட்!

விராட் கோலியின் இந்தத் தவறுதலான லைக்கால், அவ்னீத் கௌருக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்துள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அவரை இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் புதிதாகப் பின்தொடரத் தொடங்கினர். மேலும், சுமார் 12 புதிய பிராண்ட் ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட்டுள்ளதாகவும், அவரது பிராண்ட் மதிப்பு 30% அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Story first published: Tuesday, August 26, 2025, 11:03 [IST]
Other articles published on Aug 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+