Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசியக் கோப்பைக்கு முன்.. புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறிய விராட் கோலி.. ஸ்டைலிஸ்ட் யார் தெரியுமா?

பெங்களூர்: ஆசியக் கோப்பைத் தொடருக்கு முன்பாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறியுள்ளார். அதன் புகைப்படம் இளைஞர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

90களுக்கு பின் வந்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஏராளமான நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதுவர்களாக செயல்பட்டு வருகின்றனர். சச்சின், சவுரவ் கங்குலி உள்ளிட்ட வீரர்கள் இன்றும் விளம்பரத் துறையில் உச்சத்தில் இருக்கிறார்கள். ஆனால் இதற்கு எந்த கிரிக்கெட் வீரரும் தங்களது தோற்றங்களை மாற்றிக் கொண்டதில்லை. பெரும்பாலும் சச்சின், கங்குலி உள்ளிட்டோர் ஒரே தோற்றத்தில் தான் இருப்பார்கள்.

Virat Kohlis new look ahead of Asia Cup 2023 is trending in Social Media

ஆனால் தோனிக்கு பின் வந்த வீரர்கள் அனைவரும் ஒவ்வொரு காலத்திலும் புதிய புதிய ஸ்டைலில் தோற்றம் அளிக்கிறார்கள். இதற்கு பின் அவர்களின் விளம்பர மற்றும் வணிக நோக்கமும் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில் விராட் கோலி தான் இந்திய கிரிக்கெட் வீரர்களில் அதிக வருமானம் ஈட்டக் கூடிய வீரராக வலம் வருகிறார்.

விராட் கோலி உடையில் தொடங்கி அணியும் வாட்ச், கேட்கும் ஹெட்போன் வரை வணிகத்தால் நிரம்பி இருக்கிறது. இதற்கு அவரின் ஃபிட்னஸ் மற்றும் தோற்றமும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பெரும்பாலான இளைஞர்கள் விராட் கோலியின் தக் தாடியை தான் இன்றும் தங்களின் ஸ்டைலாக பின்பற்றி வருகின்றனர்.

Virat Kohlis new look ahead of Asia Cup 2023 is trending in Social Media

அதன்பின் விராட் கோலியின் ஹேர்ஸ்டைல், டேட்டூ உட்பட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அணுஅணுவாக விராட் கோலியை பின்பற்ற தொடங்கினர். அண்மையில் ஐபிஎல் தொடருக்கு முன்பாக கூட புதிய டாட்டூ ஒன்றை விராட் கோலி போட்டுக் கொண்டார். இந்த நிலையில் ஆசியக் கோப்பைத் தொடருக்கு முன் விராட் கோலி புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறி இருக்கிறார்.

இந்த புதிய ஹேர்ஸ்டைலுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள விராட் கோலி, ஸ்டைலிஸ்டான அல்ஃபகத் அஹ்மத் என்பவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். விராட் கோலியின் புதிய ஹேர் ஸ்டைல் புகைப்படம் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. முன்னதாக அதே ஸ்டைலிஸ்ட்டிடம் சென்று, தோனியின் ஹேர் ஸ்டைலை பின்பற்றி இஷான் கிஷன் முடிதிருத்தம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, August 28, 2023, 17:03 [IST]
Other articles published on Aug 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+