For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs NZ: மைதானத்தில் விராட் கோலி செய்த செயல்.. பிலிப்ஸ் விக்கெட் விழுந்தவுடன் ஒரே ஜாலிதான்

வதோதரா: இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 300 ரன்கள் என்ற இமால இலக்கை இந்தியா துரத்தி அடித்தது ஒருபக்கம் இருக்க, மைதானத்தில் விராட் கோலி செய்த "குசும்பு" வேலை ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. கிளென் பிலிப்ஸ் விக்கெட்டை வீழ்த்தியதும் விராட் கோலி செய்த கொண்டாட்டம் ஒன்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, அச்சுறுத்தலாக விளங்கிய கிளென் பிலிப்ஸ் விக்கெட்டை வீழ்த்துவது இந்திய அணிக்கு முக்கியமாக இருந்தது. அப்போது பந்துவீச வந்த குல்தீப் யாதவ், ஒரு அற்புதமான ஸ்லோயர் பந்தை ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசினார். இதை கணிக்கத் தவறிய பிலிப்ஸ், அவசரப்பட்டு டிரைவ் ஆட முயன்றார். பேட்டில் சரியாக படாத பந்து, கவரில் நின்றிருந்த துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை நோக்கி காற்றில் பறந்தது. மிக எளிதாக அந்த கேட்சை பிடித்தார் ஸ்ரேயாஸ்.

Virat Kohli s Snake Charmer Celebration Goes Viral During India vs New Zealand 1st ODI in Vadodara

விக்கெட் விழுந்த மகிழ்ச்சியில் அணியினர் அனைவரும் கத்திக் கொண்டாட, விராட் கோலி மட்டும் வித்தியாசமாக சைகை செய்தார். ஸ்ரேயாஸ் ஐயர் கேட்ச் பிடித்தவுடன், கைகளை மகுடி ஊதுவது போல வைத்துக்கொண்டு, பாம்பாட்டி போல சைகை காட்டினார். "பிலிப்ஸ் எனும் பாம்பை அடக்கியாச்சு" என்பது போல கோலி செய்த இந்த செயல், மைதானத்தில் இருந்த கேமராக்களில் சிக்கியது. தற்போது சமூக வலைதளங்களில் "கோலி ஆடினாலே ஜாலி" என்று ரசிகர்கள் இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வெறும் கொண்டாட்டத்தோடு மட்டும் கோலி நின்றுவிடவில்லை. 301 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, பேட்டிங்கிலும் முதுகெலும்பாகத் திகழ்ந்தார். ரோகித் சர்மா அவுட்டான பிறகு களமிறங்கிய கோலி, நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தார். 91 பந்துகளில் 93 ரன்கள் குவித்த அவர், துரதிர்ஷ்டவசமாக 7 ரன்களில் சதத்தை நழுவவிட்டார். இருப்பினும், அவரது இந்த ஆட்டமே இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது. இதற்காக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

நியூசிலாந்து நிர்ணயித்த 300 ரன்களை, இந்தியா 49 ஓவர்களிலேயே எட்டிப் பிடித்தது. சுப்மன் கில் 56 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 49 ரன்கள் மற்றும் கோலி 93 ரன்கள் குவித்தனர். இந்த வெற்றியால் இந்தியா 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

Story first published: Monday, January 12, 2026, 10:36 [IST]
Other articles published on Jan 12, 2026
English summary
Virat Kohli's "Snake Charmer" Celebration Goes Viral During India vs New Zealand 1st ODI in Vadodara
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+