Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி இதுவரை குவித்த டெஸ்ட் போட்டி ரன்கள், பேட்டிங் சராசரி, 7 அணிகளுக்கு எதிரான செயல்பாடு

மும்பை: விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் நிலையில், அவரது டெஸ்ட் போட்டி புள்ளிவிவரங்கள் என்ன என்பது பற்றிப் பார்க்கலாம். விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக எத்தனை ரன்கள் எடுத்திருக்கிறார் என்பதைத் தாண்டி, ஒவ்வொரு அணிக்கும் எதிராக எவ்வளவு ரன் எடுத்திருக்கிறார் என்பதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

விராட் கோலி மொத்தம் 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9230 ரன்கள் சேர்த்திருக்கிறார். இந்தியாவிலேயே டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த நான்காவது வீரராக இருக்கிறார் விராட் கோலி. அவர் 30 டெஸ்ட் சதங்களையும், 31 அரை சதங்களையும் அடித்திருக்கிறார்.

Indian Cricket Team Virat Kohli Test Cricket Virat Kohli Retirement

அணிகளுக்கு எதிராக விராட் கோலியின் டெஸ்ட் ரன்கள் மற்றும் சராசரி:

விராட் கோலி 7 அணிகளுக்கு எதிராக அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அதில் ஐந்து அணிகளுக்கு எதிராக 1000 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோர்களை எடுத்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவே அதிக ரன்களை குவித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 53 இன்னிங்ஸ்களில் 2232 ரன்களை சேர்த்திருக்கிறார்.

பல்வேறு அணிகளுக்கு எதிராக விராட் கோலியின் பேட்டிங் சராசரிகள் பின்வருமாறு:

இலங்கை அணிக்கு எதிராக: 67.81

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக: 54.15

வங்கதேசத்துக்கு எதிராக: 48.72

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக: 48.52

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக: 43.76

இங்கிலாந்துக்கு எதிராக: 42.36

நியூசிலாந்து அணிக்கு எதிராக: 38.36

மேலும் இந்தியா உட்பட எட்டு நாடுகளில் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

விராட் கோலியின் டெஸ்ட் புள்ளிவிவரங்கள் (முக்கிய நாடுகள்):

இந்தியா: 4336 ரன்கள், சராசரி 55.58 (அதிகபட்ச ரன்கள்)

ஆஸ்திரேலியா: 1542 ரன்கள், சராசரி 46.72

இங்கிலாந்து: 1096 ரன்கள், சராசரி 33.21

தென் ஆப்பிரிக்கா: 891 ரன்கள், சராசரி 49.50 (அதிகபட்ச சராசரி)

விராட் கோலி 14 ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இதில் 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் தான் அவர் மிகச் சிறப்பாக விளையாடி அதிக ரன்களை குவித்திருக்கிறார்.

ஆண்டு வாரியான ரன்கள் (2016-2019):

2016: 18 இன்னிங்ஸ்களில் 1215 ரன்கள்

2017: 16 இன்னிங்ஸ்களில் 1059 ரன்கள்

2018: 24 இன்னிங்ஸ்களில் 1322 ரன்கள்

2019: 11 இன்னிங்ஸ்களில் 612 ரன்கள்

விராட் கோலி 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் ஓய்வில் இருந்து மீண்டும் கிரிக்கெட் ஆட வந்தபோது, அவரது பேட்டிங்கில் மிகப்பெரும் சரிவு ஏற்பட்டது. அதன் பிறகு அவர் டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சராசரியாகவே விளையாடினார். 2020 முதல் 2025 வரை மொத்தம் மூன்று சதங்களும், ஒன்பது அரை சதங்களும் மட்டுமே அடித்தார். இதை அடுத்து தற்போது விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார்.

Story first published: Monday, May 12, 2025, 13:42 [IST]
Other articles published on May 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+