மைதானத்துல ரொம்ப உணர்ச்சிவசப்படறாரு... ஆக்ரோஷமா நடந்துக்கறாரு... மார்கன் சொல்லியிருக்காரு!
புனே : இந்திய கேப்டன் விராட் கோலி மிகவும் உணர்ச்சிவசப்படுவதாகவும் மைதானத்தில் தீவிரமாக நடந்து கொள்வதாகவும் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் தெரிவித்துள்ளார்.
ஜோஸ் பட்லர் மற்றும் விராட் கோலி இடையில் கடந்த டி20 போட்டியில் என்ன நடந்தது என்பது குறித்து தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார்.
முக்கியமான போட்டிகளில் இதுபோன்ற தகராறுகள் வருவது சகஜம்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டி20 தொடர் வெற்றி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி அவுட்டாகாமல் 80 ரன்களை குவித்திருந்தார். மேலும் துவக்க வீரராகவும் களமிறங்கி விளையாடினார்.

இயான் மார்கன் கருத்து
இந்த ஆட்டத்தின்போது ஜோஸ் பட்லர் மற்றும் விராட் கோலி இடையில் தகராறு மூண்டது. இதையடுத்து அம்பயர் வந்து இருவரையும் சமாதானப்படுத்தினார். இந்நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கேப்டன் இயான் மார்கன் தெரிவித்துள்ளார்.

உணர்ச்சிவசப்படும் கோலி
மேலும் இதுபோன்ற முக்கியமான போட்டிகளில் இத்தகைய தகராறுகள் ஏற்படுவது சகஜம்தான் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் மைதானத்தில் விராட் கோலி மிகவும் உணர்ச்சிவசப்படுவதாகவும் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒருநாள் தொடர் துவக்கம்
போட்டிகளில் விராட் கோலி முக்கியமான பங்கு வகிப்பதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதனிடையே டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் வெற்றி கொண்டுள்ள இந்திய அணி இன்றைய தினம் இங்கிலாந்துடன் ஒருநாள் தொடரில் மோதவுள்ளது. இந்த தொடரையும் வெற்றி கொள்ளும் தீவரம் இந்திய அணியிடம் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications