Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"கன்னடம்" தெரியுமா? - சமாளித்த விராட் கோலி.. ஆர்சிபி ரசிகர்கள் "ஷாக்"

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் என்பதைத் தாண்டி, ஆர்சிபி அணியின் கேப்டனான விராட் கோலியின் பதில், ஆர்சிபி ரசிகர்களை சற்றே 'என்னப்பா இவரு' என்று சொல்ல வைத்திருக்கிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. முதன் முதலாக நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், இறுதிப் போட்டி வரை இந்திய அணி முன்னேறி இருப்பதால், ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். பலம் வாய்ந்த இரு அணிகள், கடினமான பிட்ச் என்று ஒரு பெரும் சவாலான தொடரை எதிர்நோக்கியுள்ளது கோலி டீம்.

தோனி நட்பு

தோனி நட்பு

இந்த நிலையில், கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில், வாசிம் அக்ரம் தொடங்கி, தோனி வரை பலர் தொடர்பான கேள்விகளுக்கு அவர் பதில் அளித்திருக்கிறார். குறிப்பாக, கடந்த கால பவுலர்களில், யார் உங்களை அதிகம் பாடுபடுத்தியிருப்பார்? என்ற கேள்விக்கு வாசிம் அக்ரம் என்று பதில் அளித்த கோலி, தோனியுடனான தனது நட்பு நம்பிக்கை, மரியாதை கொண்டது என்று விளக்கமளிக்க அவரது பதில் வைரலானது.

டிவி ஷோ

டிவி ஷோ

அதேபோல், உங்களின் ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, மனைவி அனுஷ்காவுடன் அமர்ந்து நல்ல டிவி ஷோ பார்ப்பேன் என்று கூறினார். மேலும், அவரது உணவுப் பழக்கம் குறித்து கேட்டதற்கு, இந்திய, சீன உணவுகளும் பழங்கள், பாதாம்பருப்பு போன்றவற்றை எடுத்துக் கொள்வேன் என்றார்.

கன்னடம் புரியுமா?

கன்னடம் புரியுமா?

இதில் ரசிகர் ஒருவர், 'உங்களுக்கு கன்னடம் பேச தெரியுமா? பேசினால் புரிந்து கொள்வீர்களா?' என்று கேள்வி எழுப்பினார். காரணம், பரம்பரை பரம்பரையாக ஆர்சிபி அணிக்காக ஆடி வருபவர் விராட் கோலி. ஒருமுறை கூட கோப்பை வெல்லவில்லை என்றாலும், அந்த அணி மீது வெறித்தனமான அன்பை கன்னட ரசிகர்கள் பொழிவார்கள். குறிப்பாக கோலி மீது. இந்த நிலையில், ரசிகரின் கேள்விக்கு விராட் கோலி, "ஸ்வல்பா, ஸ்வல்பா சார். ஆனால், எனக்கு பேசினால் புரியாது' என்று பதில் அளித்துள்ளார்.

இன்னமும் புரியலையா

இன்னமும் புரியலையா

இத்தனை ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்காக விளையாடுகிறார். அணியின் கேப்டன். பெங்களூர் வந்தால் ராஜ மரியாதை. இவ்வளவு இருந்தும், கன்னடம் பேசினால் கொஞ்சம் கூட புரிந்து கொள்ள முடியாது என்று கோலி கூறுகிறாரே என்று ஆர்சிபி ரசிகர்கள் சமூக தளங்களில் புலம்புவதை பார்க்க முடிகிறது. சரி.. அது என்ன 'ஸ்வல்பா'?... 'கொஞ்சம் கொஞ்சம்' பேச தெரியும் என்று கூறியிருக்கிறார் கோலி.

Story first published: Monday, May 31, 2021, 13:31 [IST]
Other articles published on May 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+