Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன "அவர்தான்" இந்திய டெஸ்ட் அணியின் ஓப்பனரா?.. நம்பவே முடியலையே.. செம டிவிஸ்ட் கொடுத்த கோலி

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி ஆட உள்ள டெஸ்ட் போட்டியில் இந்திய அணி புதிய ஓப்பனிங் வீரரை களமிறக்க போகிறது என்று கூறப்படுகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒருநாள், டி 20 போட்டிகள் தற்போது முடிந்துள்ள நிலையில்..டெஸ்ட் போட்டிகள் தொடங்க உள்ளது.

வியாழக்கிழமை டெஸ்ட் போட்டிகள் நடக்க உள்ள நிலையில் இதற்காக இந்திய அணி தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பயிற்சி

பயிற்சி

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி ஆட உள்ள டெஸ்ட் போட்டியில் இந்திய அணி புதிய ஓப்பனிங் வீரர்களை களமிறக்க போகிறது என்று கூறப்படுகிறது. இந்திய அணியில் முதல் டெஸ்டில் ரோஹித் சர்மா ஆடவில்லை. மீதம் இருப்பதில் கே. எல் ராகுல் மிடில் ஆர்டரில் களமிறங்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

இதனால் ஓப்பனிங் இறங்க சுப்மான் கில், பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகிய வீரர்கள்தான் உள்ளனர். இதில் மயங்க் அகர்வால் ஓப்பனிங் இறங்குவது உறுதியாகிவிட்டது. ஆனால் மீதம் இருக்கும் இன்னொரு ஓப்பனிங் யார் இறங்க போவது என்று கேள்வி எழுந்தது.

யார்

யார்

அதன்படி யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியில் இன்னொரு ஓப்பனிங் வீரராக விர்த்திமான் சாகா இறங்குவார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வருகிறது. இவரின் பார்ம் மற்றும் பேட்டிங் திறனை பார்த்து ஓப்பனிங் இறக்க உள்ளனர். ஐபிஎல் தொடரில் ஓப்பனிங் இறங்கி இவர் நன்றாக ஆடினார்.

சிறப்பாக ஆடினார்

சிறப்பாக ஆடினார்

ஐபிஎல் தொடர் முழுக்க இவர் ஓப்பனிங் இறங்கி சிறப்பாக ஆடினார். அதேபோல் முதல் தர போட்டிகளிலும் இவர் ஓப்பனிங்கில் சிறப்பாக ஆடி வருகிறார். இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இவருக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

கீப்பர்

கீப்பர்

இதனால் இவர்தான் கீப்பராக இருப்பார். ஆகவே இந்திய அணியில் பெரும்பாலும் பண்ட் களமிறங்க வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார். ரோஹித் சர்மா வந்த பின் விர்த்திமான் சாகா மிடில் ஆர்டரில் களமிறங்கி ஆட வாய்ப்புள்ளது.

Story first published: Tuesday, December 15, 2020, 21:23 [IST]
Other articles published on Dec 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+