Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சந்திரா.. அவங்க 2 பேரையும் பார்த்துக்கோ.. டெஸ்ட் கிரிக்கெட்டை ஆளப்போறங்க.. சேவாக் சொன்ன ஆருடம்

மும்பை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, அபாயகரமான அணியாக இனி வரும் நாட்களில் விளங்கும் என்று விரேந்திர சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வட சென்னை படத்தில் ஒரு பாட்டி, தனுஷை பார்த்து ஆண்டிரியாவிடம் சொல்வது போல், நம்ம சேவாக்கும் ஆருடம் கூறியுள்ளார்.

அந்த 2 வீரர்கள் யார், சேவாக் சொன்னது நடக்குமா என்பதை தற்போது காணலாம்.

சேவாக் நம்பிக்கை

சேவாக் நம்பிக்கை

உலக கிரிக்கெட்டை இந்தியா ஆளும், அதற்கு முக்கிய காரணமாக ரிஷப் பண்டும், பிரித்வி ஷாவும் இருப்பார்கள் என சேவாக் நம்பிக்கை தெரிவித்தார். இருவரும் ஒரே சமயத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தாலும், ரிஷப் பண்ட்டின் கிரிக்கெட் வாழ்க்கை வேற லெவலுக்கு சென்றுவிட்டது.

சராசரி 40

சராசரி 40

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது சராசரியை 40 ரன்கள் என வைத்துள்ள ரிஷப் பண்ட்,சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என பெயர் எடுத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அறிமுக போட்டியில் சதம், அரைசதம் என கலக்கிய பிரித்வி ஷா, பிறகு பந்து ஸ்விங் ஆகும் அயல்நாட்டில் சரியாக ரன் குவிக்காமல் அணியில் தனது இடத்தை இழந்தார்.

எதிரணி பயப்படுவார்கள்

எதிரணி பயப்படுவார்கள்

இருப்பினும் பிரித்வி ஷா மீது நம்பிக்கை வைத்துள்ள சேவாக், டெஸ்ட் கிரிக்கெட் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் கொண்டு வரும் திறமை பிரித்வி ஷாக்கு இருப்பதாக சேவாக் கூறியுள்ளார். இருவரும் பிளேயிங் லெவனில் இருந்தால் இந்தியாவுக்கு எதிராக 400 ரன்களை இலக்காக நிர்ணயிக்க கூட எதிரணி வீரர்கள் யோசிப்பார்கள் என்று சேவாக் குறிப்பிட்டுள்ளார்.

தொடக்க வீரராக பண்ட்

தொடக்க வீரராக பண்ட்

ஒருநாள் போட்டியை பொறத்தவரை ரிஷப் பண்ட் தொடக்க வீரராக பல சாதனைகளை படைப்பார் என்று சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 50, 100 ரன்கள் அடிப்பதை விட எவ்வளவு வேகமாக அடிக்கின்றோம் என்பது தான் முக்கியம். 4வது, 5வது வீரராக இறங்கினால், ரிஷப் பண்ட் அதீத பொறுப்பை சுமக்க நேரிடும் என்று சேவாக் அறிவுறுத்தினார்.

Story first published: Friday, May 20, 2022, 22:22 [IST]
Other articles published on May 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+