For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நான் என்ன பார்ட் டைம் எம்பி யா? பிஆர் வேலை தான் எல்லாம் பார்க்கிறாங்க! கம்பீர் மீது சேவாக் தாக்கு

நடிகர்கள் கிரிக்கெட் வீரர்கள் தாங்கள் ஓய்வு பெற்ற பிறகு அரசியலில் வளம் வருவது வழக்கம். ஒரு சிலருக்கு அரசியல் கட்சியினரை தங்களுடைய கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடுங்கள் என்று அழைப்பு விடுப்பார்கள்.

இதனை பயன்படுத்திக் கொண்டு சில நபர்கள் மக்கள் பணியாற்றுவார்கள். ஆனால் பெரும்பாலான நபர்கள் தங்களுடைய சொந்த வேலையை தான் பார்ப்பார்கள்.

Virendar sehwag indirectly slams Gambhir as part time MP

இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் டெல்லி எம்பியாக பாஜக சார்பில் வெற்றி பெற்றாலும், தற்போது கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராகவும் ஐபிஎல் தொடரின் போது லக்னோ அணியின் மென்டாராகவும் பணிபுரிந்து வருகிறார். இதனால் அவர் மக்கள் பணியை பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவை பாரத் என்று மாற்றுங்கள் என சேவாக் கூறியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் ஷேவாகிற்கு கேள்வி ஒன்றே கேட்டுள்ளார். அதில் நான் எப்போதுமே கம்பீரை விட நீங்கள் விரைவாக எம்பியாக மாறிவிடுவீர்கள் என்று நினைத்தேன் என்று கூறினார். இதற்கு பதில் அளித்துள்ள ஷேவாக், எனக்கு அரசியலில் ஈடுபடுவதில் கொஞ்சம் கூட விருப்பம் கிடையாது.கடந்த இரண்டு தேர்தலில் இரு பெரிய கட்சிகள் என்னை வேட்பாளராக அறிவிக்க கேட்டார்கள்.

ஆனால் நான் முடியாது என்று கூறிவிட்டேன். என்னை பொறுத்தவரை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் நடிகர்களோ விளையாட்டு வீரர்களும் அரசியலில் ஈடுபடவே கூடாது.ஏனென்றால் இவர்களுக்கு சொந்தமாக ஈகோ என ஒன்று இருக்கும். மேலும் பவரை நோக்கி தான் செல்வார்கள். மக்களுக்காக நேரத்தை செலவிடும் நேரம் மிகவும் குறைவானதாக தான் இருக்கும்.

நான் அனைவரையும் சொல்லவில்லை. சிலர் இதற்கு விதிவிலக்காக இருக்கிறார்கள். ஆனால் பலரும் வெறும் பி ஆர் விளம்பர வேலைகளை தான் செய்கிறார்கள். கிரிக்கெட்டிலும் கிரிக்கெட் வர்ணனையிலும் ஈடுபட தான் விருப்பத்தோடு இருக்கின்றேன். மேலும் சிலரைப் போல் பார்ட் டைம் எம்பியாக இருந்து கொண்டு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது மட்டும் கிரிக்கெட் பக்கம் வருவது எனக்கு எந்த உடன்பாடும் இல்லை என்று ஷேவாக் பதிலடி கொடுத்திருக்கிறார்.

Story first published: Wednesday, September 6, 2023, 18:19 [IST]
Other articles published on Sep 6, 2023
English summary
Virendar sehwag indirectly slams Gambhir as part time MP நான் என்ன பார்ட் டைம் எம்பி யா? பிஆர் வேலை தான் எல்லாம் பார்க்கிறாங்க! கம்பீர் மீது சேவாக் தாக்கு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+