Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தேர்வுக்குழுவின் மெகா தவறு.. ரோகித் சர்மா விசயத்தில் கோட்டைவிட்டார்கள்.. சேவாக் காட்டமான விமர்சனம்

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்டில் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டதில் மெகா தவறு நடந்திருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வரும் 1ஆம் தேதி தொடங்க உள்ள டெஸ்ட் போட்டியில் கொரோனா தொற்று காரணமாக ரோகித் சர்மா களமிறங்குவது சந்தேகமாகியுள்ளது.

இதனால், போட்டிக்கு இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில், மாயங் அகர்வாலை இங்கிலாந்துக்கு செல்லுமாறு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

எப்படி முடியும்?

எப்படி முடியும்?

தற்போது எவ்வித பயிற்சியும் இல்லாமல், 2 நாட்களுக்கு முன் சென்று, டெஸ்ட் போட்டியில் விளையாட என்று மாயங் அகர்வாலை அனுப்பினால் அவர் என்ன தான் செய்வார், இல்லை இது அணிக்கு தான் நல்லதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சேவாக், தேர்வுக்குழுவினரை கடுமையாக சாடியுள்ளார்.

தேர்வுக்குழு மீது தவறு

தேர்வுக்குழு மீது தவறு

இங்கிலாந்து போன்ற டெஸ்ட் போட்டிக்கு வெறும் 2 தொடக்க வீரர்களை மட்டும் தேர்வு செய்தது மிகவும் தவறு. அனைவரும் ரோகித் ஃபிட்டாக இருக்கிறார், சுப்மான் கில் ஃபிட்டாக இருக்கிறார் என நினைத்தனர். ஆனால் கொரோனா பாதிப்பு குறித்து அவர்கள் யோசிக்கவில்லை. 22 பேர் கொண்ட அணியில் ஒரு மாற்று தொடக்க வீரர் இல்லை என்றால் என்ன வென்று சொல்வது.

மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?

மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?

நாளைக்கு அவர்கள் புஜாராவையோ, கேஎஸ் பரத்தையோ, தொடக்க வீரர்களாக களமிறங்க சொல்வார்கள். ஆனால் அவர்கள் சொதப்பி விட்டார்கள் என்றால் உங்களால் மீண்டும் இருவருக்கும் வாய்ப்பு கொடுக்க முடியுமா? புஜாரா இப்போது தான் கவுண்டி கிரிக்கெட் எல்லாம் விளையாடி அணியில் இடம் பிடித்து இருக்கிறார்.

சேவாக் கேள்வி

சேவாக் கேள்வி

இந்த நிலையில், திடீரென்று அவரை தொடக்க வீரராக விளையாடுங்கள் என்று சொல்லி, அவருக்கு அணி நிர்வாகம் ஊக்கம் தருவார்கள். நான் கேட்பது எல்லாம், எதிர்காலத்தில் அவர்களுக்கு இது போல் ஆதரவு அளித்து அணியில் நீடிக்க வைப்பீர்களா உன்று சேவாக் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

Story first published: Monday, June 27, 2022, 19:01 [IST]
Other articles published on Jun 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+