For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டிராவிட் மீது சேவாக் பரபரப்பு புகார்.. சாதனைகள் தடுக்கப்பட்டது என வேதனை.. பாட்டு பாடி ரன் அடிச்சேன்

மும்பை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முறை முச்சதம் விளாசிய ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றவர் சேவாக்.

ஆனால், அதே சேவாக் டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்காமல் வெளியே உட்கார வைக்கப்பட்டார்.

தனது கிரிக்கெட் பயணம் குறித்து சேவாக் அளித்த பேட்டியில், டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்தேன்.

அணியிலிருந்து நீக்கம்

அணியிலிருந்து நீக்கம்

ஆனால் நான் டெஸ்ட் அணியிலிருந்து பிற்காலத்தில் நீக்கப்படுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. என்னை அணியிலிருந்து நீக்கி விட்டார்கள். எனக்கு ஆதரவு அளித்து வாய்ப்பு கொடுத்து இருந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை அடித்திருப்பேன். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்திருக்க வேண்டியது.

கும்ப்ளே கொடுத்த வாக்குறுதி

கும்ப்ளே கொடுத்த வாக்குறுதி

அனில் கும்ப்ளே கேப்டனாக வந்த பிறகு தான் என் கிரிக்கெட் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சியே கிடைத்தது. ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் முதல் 2 டெஸ்டின் போது எனக்கு வாய்ப்பு தரப்படவில்லை. 3வது டெஸ்ட் முன்பு பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. அப்போது என்னிடம் பேசிய கும்ப்ளே, இந்த ஆட்டத்தில் நான் அரைசதம் அடித்தால், அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பு தருவேன் என்று கும்ப்ளே கூறியதாக சேவாக் சுட்டிக்காட்டினார்.

கடினமான ரன்கள்

கடினமான ரன்கள்

ஆனால் அந்தப் போட்டியில் சேவாக் சதம் விளாசியதை அடுத்து பெர்த் டெஸ்டில் வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அடிலெய்ட் டெஸ்டில் சேவாக் முதல் இன்னிங்சில் 63 ரன்களும், 2வது இன்னிங்சில் 151 ரன்களும் அடித்து அணியை காப்பாற்றினார். இது குறித்து நினைவுக் கூர்ந்த சேவாக், என் வாழ்நாளில் நான் அடித்ததில் அந்த 61 ரன்களை தான் மிகவும் கஷ்டப்பட்டு அடித்தேன்.

பாட்டு பாடி அடித்தேன்

பாட்டு பாடி அடித்தேன்

எனக்கு மிகவும் அழுத்தம் தரப்பட்டது. இதனை போக்க நடுவரிடம் பேசி சிரிப்பேன், பிடித்த பாடலை ஹம்மிங் செய்து கொண்டே விளையாடினேன். அனில் பாய் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பற்றுவதற்காகவே விளையாடினேன். சைமண்ட்ஸ் விவகாரத்தில் கும்ப்ளே கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். கும்ப்ளே மட்டும் இல்லை என்றால் அந்த தொடர் நடந்திருக்காது. ஹர்பஜன் கிரிக்கெட் வாழ்க்கையும் அப்போதே முடிந்திருக்கும்.

Story first published: Wednesday, May 25, 2022, 18:00 [IST]
Other articles published on May 25, 2022
English summary
Virendar Sehwag recalls about How anil kumble saved his test cricket life டிராவிட் மீது சேவாக் பரபரப்பு புகார்.. சாதனைகள் தடுக்கப்பட்டது என வேதனை.. பாட்டு பாடி ரன் அடிச்சேன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+