Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி மீது பரபரப்பு புகார்..! என்னுடைய முடிவை சச்சின் தான் மாற்றினார்.. ரகசியத்தை உடைத்த சேவாக்

டெல்லி: இந்திய கிரிக்கெட் ஒருநாள் அணியிலிருந்து 2008ஆம் ஆண்டே ஓய்வு பெற இருந்ததாக விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேட்டி ஒன்றில் சேவாக் கலந்து கொண்டார். அப்போது விராட் கோலியின் ஃபார்ம் பிரச்சினை குறித்து பேசப்பட்டது.

Recommended Video

ODI Cricket-ல் இருந்து விலக முடிவு எடுத்த Sehwag.. தடுத்த Sachin #Cricket

அப்போது பேசிய சேவாக், இதனை இதுவரை நான் யாரிடமும் கூறியது இல்லை. முதல் முறையாக உங்களிடம் சொல்கிறேன்.

அணியிலிருந்து நீக்கம்

அணியிலிருந்து நீக்கம்

2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் முத்தரப்பு தொடரில் முதல் 4 போட்டியில் விளையாடிய நான், அரைசதம் அடிக்க வில்லை என்ற காரணத்தால் தோனி என்னை அணியிலிருந்து நீக்கிவிட்டார். பிறகு சச்சின், கம்பீர், ராபின் உத்தப்பாவை தொடக்கத்திலும், ரோகித் சர்மா, யுவராஜ், தோனி ஆகியோர் நடுவரிசையிலும் விளையாடினர்.

எதிர்மறையான எண்ணம்

எதிர்மறையான எண்ணம்

இதனை பார்த்ததும், இனி நமக்கு ஒருநாள் அணியில் இடம் கிடைக்காது என்று எண்ணி கொண்டேன். எதிர்மறையான எண்ணங்கள் என் மனதை ஆக்கிரமிப்பு செய்தது. ஒவ்வொரு சர்வதேச கிரிக்கெட் வீரருக்கும் இப்படி ஒரு சூழல் ஏற்படும். அந்த தொடரில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு இந்தியா வந்ததும யோசித்தேன்.

ஓய்வு பெற நினைத்தேன்

ஓய்வு பெற நினைத்தேன்

இனி இடம் கிடைக்காது, நாமே ஓய்வு பெற்று வெளியேறி விடவோம் என்று நினைத்தேன். சச்சின் தான் என் முடிவில் தலையிட்டு என்னை ஓய்வு பெற விடாமல் தடுத்தார். இது குறித்து அப்போதைய தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்திடம் பேச சொன்னார். நான் ஸ்ரீகாந்திடம், என்னை தொடர்ந்து அணியில் எடுக்க வேண்டும் என்று உறுதி கொடுங்கள், இல்லையேனில் ஓய்வு பெறுகிறேன் என்று கேட்டேன்.

தோனியின் வாக்குறுதி

தோனியின் வாக்குறுதி

அப்போது ஸ்ரீகாந்தும், காலம் மாறிவிட்டது, உனக்காக வேண்டும் என்றால் தோனியிடம் பேசுகிறேன் என்று கூறினார். அதன் பிறகு தோனியே, தம்மிடம் நீங்கள் அனைத்து போட்டியிலும் விளையாடுவீர்கள் என உறுதி அளித்தார். அதன் பிறகு தான் எனக்கு நம்பிக்கை வந்து மீண்டும் ஒருநாள் போட்டியில் விளையாடி ரன்கள் குவித்தேன் என்று சேவாக் கூறினார்.

Story first published: Thursday, June 2, 2022, 11:15 [IST]
Other articles published on Jun 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+