Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Paytm கோப்பை இருக்கு, உலககோப்பை எங்கே? இளம் வீரர்களுக்கு வாய்ப்பு எப்போ தருவீங்க ? சேவாக் நச் கேள்வி

டெல்லி : டி20 உலக கோப்பையில் அரை இறுதியில் இந்திய அணி படுதோல்வி தழுவியதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரர் சேவாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பையில் இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட முறையே தவறு என்று விமர்சனம் செய்துள்ள வீரேந்திர சேவாக்,

சீனியர்கள் இனியும் அணியில் தொடர வேண்டுமா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

இது தொடர்பாக பேசிய அவர் சொந்த மண்ணில் நடைபெறும் இருத்தரப்பு தொடர்களை எல்லாம் இந்திய அணி வெற்றி பெறுகிறது. ஆனால் அந்த தொடரில் எத்தனை இளம் வீரர்கள் விளையாடுகிறார்கள் என்று நீங்கள் பார்க்க வேண்டும். சீனியர்கள் சொந்த மண்ணில் நடைபெறும் தொடர்களில் எல்லாம் ஓய்வு எடுத்துக்கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தருகிறார்கள்.

அச்சமின்றி விளையாடுகிறார்கள்

அச்சமின்றி விளையாடுகிறார்கள்

அந்த இளம் வீரர்களும் வெற்றியை ருசிக்கிறார்கள். இருதரப்புத் தொடரில் வெற்றி பெரும் வீரர்களை ஏன் உலக கோப்பை தொடரில் வாய்ப்பு கொடுக்க மறுக்கிறீர்கள். இளம் கிரிக்கெட் வீரர்கள் பலர் அச்சமின்றி விளையாடிய வருவதை நீங்கள் பார்ப்பதில்லையா?. இஷான் கிஷன் ஆக இருக்கட்டும், சஞ்சு சாம்சனாக இருக்கட்டும், பிரித்விஷா அல்லது ருத்துராஜ் கெய்க்வாட்டாக இருக்கட்டும்.

கடும் நெருக்கடி

கடும் நெருக்கடி

இவர்கள் அனைவரும் சர்வதேச வீரர்கள். கிடைக்கும் வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்தி ரன்களை குவிக்கிறார்கள். இப்போது கூட நியூசிலாந்து தொடரில் சீனியர்கள் அனைவரும் ஓய்வு கொடுத்துவிட்டு, இளம் வீரர்களைத்தான் பிசிசிஐ அனுப்புகிறது. நியூசிலாந்து தொடரில் வெற்றி பெற்றால் அவர்களுக்கு பிசிசிஐ என்ன செய்யும். என்னை பொறுத்தவரை சீனியர் வீரர்களுக்கு தற்போது கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தெரிய வேண்டும் இளம் வீரர்கள் நன்றாக விளையாடி வருகிறார்கள்.

பிசிசிஐ அனுப்பிவிடும்

பிசிசிஐ அனுப்பிவிடும்

நாம் இனி ரன் குவிக்காமல் இருந்தால் பிசிசிஐ நமக்கு நன்றி தெரிவித்து வழி அனுப்பிவிடும் என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று சேவாக் கூறினார். சேவாக்கின் இந்த கருத்து, நூற்றுக்கு நூறு உண்மையான விஷயமாக அமைந்துள்ளது. t20 உலக கோப்பை தொடர்க்கும் முன்பு நடைபெற்ற பல கிரிக்கெட் போட்டிகளில் சீனியர்கள் ஓய்வு வழங்கப்பட்டிருந்தது. சாகல், ஹர்சல் பட்டேல் ஆகியோர் தொடர்ந்து விளையாடுகின்ற நிலையில் டி20 உலக கோப்பையில் அவர்களுக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, November 11, 2022, 12:43 [IST]
Other articles published on Nov 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+