
ஏமாற்றினார்
கிரேக் சேப்பல் இந்திய அணியின் பயிற்சியாளராக வந்த உடனே அவர் முதலில் சொன்னது அடுத்த கேப்டனாக சேவாக் தான் வர இருக்கிறார் என்று கூறினார். ஆனால் அடுத்த இரண்டு மாதத்தில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. நான் அணியை விட்டு நீக்கப்பட்டேன். நான் எனது நாட்டை மிகவும் நம்புகிறேன். நமது நாட்டில் நிறைய நல்ல பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள்.அவர்களால் இந்திய அணி சிறப்பாக நிர்வாகிக்க முடியும்.

வெளிநாட்டு பயிற்சியாளர் எதற்கு
இதனால் தான் நான் சொல்கிறேன் இந்திய அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்கள் தேவையில்லை. நான் விளையாடும் காலத்தில் என்னுடைய சீனியர்களிடம் இதே கேள்வியை தான் கேட்பேன். ஜான் ரைட்க்கு பிறகு நமக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் ஏன் தேவை என்று கேட்பேன். என்னுடைய சீனியர்கள் பலர் இந்திய பயிற்சியாளர்கள் வழிகாட்டுதன் கீழ் விளையாடி இருக்கிறார்கள். இதனால் அவர்கள் சொன்ன பதில் சில இந்திய பயிற்சியாளர்கள் ஏதேனும் ஒரு வீரருக்கு சாதகமாக நடந்து கொள்வார் என்பதால்தான் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுவதாக கூறினர்.

மேனேஜர் தேவை
இதன் மூலம் இந்திய அணியை வெளி நாட்டு பயிற்சியாளர் வேறொரு கோணத்தில் பார்த்து அணிக்கு தேவையானதை மேற்கொள்வார்கள் என்று கூறினார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை அதில் துணியும் நம்பிக்கை கிடையாது. எப்போதுமே வெளிநாட்டு பயிற்சியாளர் கூட சச்சின் அல்லது கங்குலி லட்சுமணன் ஆகியோரை கையாள்வதில் அழுத்ததை அனுபவிப்பார்கள். என்னை கேட்டால் இந்திய அணிக்கு பயிற்சியாளரே தேவையில்லை. மேனேஜர் மட்டும்தான் இந்திய அணிக்கு தேவை.

50 பந்துகள் தான்
வீரர்களுடன் நட்புறவை வளர்த்து நல்ல உறவை பேணி காக்க வேண்டும். ஒரு வீரருக்கு எவ்வளவு பயிற்சி தேவை என்பதை பயிற்சியாளர் தெரிந்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் கேரி கிறிஸ்டின் முதன்மையானவர். கேரி கிறிஸ்டன் என்னை 50 பந்துகளை தான் எதிர்கொள்ள சொல்வார். ஆனால் ட்ராவிட், சச்சினை 200 பந்துகளுக்கு மேல் எதிர்கொள்ள சொல்வார். அதன் பிறகு தான் எங்களுக்கு பிரேக் கிடைக்கும் என்றும் சேவாக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











