மும்பை : ஆசியாவின் சிறந்த நடுவரிசை வீரர் யார் என்று சேவாக்கிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சேவாக் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி இருந்தார்.
அதில் உங்களுக்கு ஆசியாவிலேயே பிடித்த மற்றும் சிறந்த நடுவரிசை கிரிக்கெட் வீரர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஷேவாக் அனைவரும் சச்சின் டெண்டுல்கர் பெயரை தான் சொல்வார்கள்.

ஆனால் நான் பாகிஸ்தான் வீரர் இன்சாமம் பெயரை சொல்வேன். ஏனென்றால் சச்சினை பொதுவான கிரிக்கெட் வீரர்கள் உடன் ஒப்பிடவே கூடாது. அவரை நான் மனிதர்கள் என்ற லிஸ்டிலேயே வைக்கவில்லை. இதனால் அவரை விட்டுவிட்டு மற்ற பேட்ஸ்மேன்கள் பொருத்தவரையில் இன்சாமம் தான் சிறந்த வீரராக தெரிகிறார். இன்சாமம் மிகவும் இனிமையானவர்.
இந்தியா, ஸ்ரீலங்கா, வங்கதேசம் என அனைத்து நாடுகளிலும் ஒப்பிட்டு பார்த்தால் இன்சாமம் விட சிறந்த வீரர்கள் யாரும் இல்லை என்று தான் நான் நினைக்கிறேன். 2003 காலகட்டத்தில் எல்லாம் ஒரு ஓவருக்கு எட்டு ரன்கள் அடிக்க வேண்டும் என்றால் அனைவரும் பதற்றம் அடைவார்கள். ஆனால் இன்சாமம்க்கு கவலை படாதீர்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று தான் சொல்வார்.
பத்து ஓவருக்கு 80 ரன்கள் அளிக்க வேண்டும் என்ற நிலை இருந்தாலும் இன்சாமம் வெற்றியை தேடி கொடுப்பார். இதனால் எனக்கு அவரை தான் பிடிக்கும் என்று ஷேவாக் கூறினார். 120 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இன்சமாம் 8,830 ரன்களும், 378 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள இன்சாமம் 11,739 ரன்களும் அடித்திருக்கிறார். கங்குலி, டிராவிட், லக்ஷ்மன், தோனி போன்ற வீரர்கள் எல்லாம் இருக்கும்போது சேவாக் பாகிஸ்தான் வீரர் பெயரை குறிப்பிட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.