Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"இந்த ஒரு விஷயம் இருந்தால் இந்தியா ஈஸியா உலகக்கோப்பை ஜெயிக்கும்”.. சுட்டிக்காட்டிய வீரேந்தர் சேவாக்

மும்பை: இந்திய அணியில் ஒரு விஷயம் மட்டும் சரியாக இருந்தால் 2027 ஒருநாள் உலகக்கோப்பையை இந்திய அணி மிக எளிதாக வென்றுவிடும் என்று முன்னாள் அதிரடி வீரர் வீரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வீரேந்தர் சேவாக், உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் வாய்ப்புகள் குறித்துப் பேசினார்.

இந்திய அணியில் தற்போது பேட்டிங் வலுவாக இருக்கும் நிலையில் பந்துவீச்சு பெரும் சரிவை சந்தித்து வருகிறது. பும்ரா அளவுக்கு ஆதிக்கம் செலுத்தும் பந்துவீச்சாளர்கள் இல்லை. இது குறித்து தான் வீரேந்தர் சேவாக் கூறி இருக்கிறார்.

Virender Sehwag Conditions India 2027 ODI World Cup Win On Strong Fast Bowling Attack

இந்தியாவின் உலகக்கோப்பை வாய்ப்பு குறித்து பேசுகையில், "நமது வேகப்பந்து வீச்சாளர்களில் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளராக ஜஸ்பிரித் பும்ரா விளங்குகிறார். உலகக்கோப்பை தொடர் முழுவதும் நமது பந்துவீச்சுப் படை காயங்கள் ஏதுமின்றி வலுவாக நீடித்தால் மட்டுமே போதும். அந்த பலம் இருந்தால் இந்திய அணி இந்த முறை உலகக்கோப்பையை மிக எளிதாக வென்றுவிடும்" என்று சேவாக் கூறினார்.

இந்திய பேட்டிங் வரிசை கடந்த 2023 உலகக்கோப்பையைப் போலவே கூடுதல் அனுபவத்துடனும், வலுவாகவும் உள்ளது. ஆனால் வேகப்பந்து வீச்சே தற்போது பெரும் கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய பந்துவீச்சாளர்கள் முறையே 295, 405 மற்றும் 351 ரன்களை வாரி வழங்கினர். முதன்மை பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார் உள்ளிட்ட மாற்று பந்துவீச்சாளர்கள் ரன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது. அங்குள்ள ஆடுகளங்கள் புதிய பந்தில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். எனவே பும்ராவின் பணிச்சுமையைச் சரியாகப் பராமரிப்பதுடன், அனுபவம் வாய்ந்த புவனேஸ்வர் குமார் போன்ற பந்துவீச்சாளர்களைத் தயார் நிலையில் வைத்திருப்பது அணிக்கு பலம் சேர்க்கும்.

2027 உலகக்கோப்பை செமி பைனல் போகும் 4 அணிகள் இதுதான்.. இந்த 2 அணிகளும் போகாது.. ஆரோன் பின்ச் கணிப்பு

2027 உலகக்கோப்பை செமி பைனல் போகும் 4 அணிகள் இதுதான்.. இந்த 2 அணிகளும் போகாது.. ஆரோன் பின்ச் கணிப்பு

பேட்டிங்கில் ரன்கள் குவித்தாலும், பந்துவீச்சு சரியாக அமையாவிட்டால் உலகக்கோப்பையை வெல்ல முடியாது என்பதை உணர்ந்து இந்திய நிர்வாகம் செயல்பட வேண்டும் என்பதே சேவாக்கின் முக்கிய எச்சரிக்கையாக உள்ளது.

சூர்யகுமாரை முந்தத் துடிக்கும் அபிஷேக் சர்மா.. வெறும் 33 ரன்கள் எடுத்தால் புதிய உலக சாதனை!

Also Read

சூர்யகுமாரை முந்தத் துடிக்கும் அபிஷேக் சர்மா.. வெறும் 33 ரன்கள் எடுத்தால் புதிய உலக சாதனை!
Story first published: Sunday, October 11, 2026, 10:10 [IST]
Other articles published on Oct 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+