பாய்ஸ்.. ரொம்ப நல்லா விளையாடுனீங்க!! பாகிஸ்தானுக்கு பதிலடி.. கம்பீர், சேவாக் வரவேற்பு!
டெல்லி : பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப் படை நடத்திய பதிலடி தாக்குதலுக்கு வரவேற்பு தெரிவித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கம்பீர் மற்றும் சேவாக் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி அன்று காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் இந்திய ராணுவ வீரர்கள் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்தியா பதிலடி
அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று (பிப்ரவரி 26) விடியற்காலை 3.30 மணி அளவில் இந்திய விமானப் படை சார்பில் மிராஜ் 2000 ஃபைட்டர் ஜெட் மூலம் பாகிஸ்தான் எல்லைக் கோட்டுக்கு அருகே தாக்குதல் நடத்தப்பட்டது.

மக்கள் வரவேற்பு
இந்த தாக்குதல் பற்றிய செய்திகள் இன்று காலை முதல் பரவி வரும் நிலையில், பலரும் இந்த அதிரடி தாக்குதலை வரவேற்றுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் சேவாக் மற்றும் கம்பீர் இந்த தாக்குதலை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
ஜெய் ஹிந்த்
கம்பீர் தன் பதிவில், "ஜெய் ஹிந்த்" என குறிப்பிட்டு இந்தியா திருப்பி அடித்தது என்பதற்கான ஹேஷ்டேக்-களை பகிர்ந்துள்ளார். இதை பலரும் வரவேற்றுள்ளனர்
நல்லா ஆடுனீங்க!
"பாய்ஸ் ரொம்ப நல்லா விளையாடினாங்க" என குறிப்பிட்டு சேவாக் பதிவிட்டுள்ளார். இதுவும் ட்விட்டரில் ட்ரென்ட் ஆகி வருகிறது. ஏற்கனவே, இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் இனி நடைபெற வாய்ப்பில்லை என கூறப்பட்டு வரும் நிலையில் இந்த பதிலடி தாக்குதல் அதை மேலும் உறுதி செய்துள்ளது.


Click it and Unblock the Notifications