Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட ஆமால !2023 உலக கோப்பை நமக்கு தான்.. யுவராஜ் சிங்கிற்கு காரணத்துடன் பதில் அளித்த சேவாக்

மும்பை : 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா வெல்லுமா என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் சமூக வலைத்தளத்தில் விவாதம் ஒன்று எழுந்துள்ளது.
இதில் யுவராஜ் சிங் எழுப்பிய கேள்விக்கு சேவாக் அளித்த பதில் ரசிகர்களிடையே ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்திருக்கிறது.

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை சச்சின், ஷேவாக், யுவராஜ் ,ரெய்னா, தோனி, கம்பீர், கோலி, ஜாகிர் கான், நெஹ்ரா, முனாப் பட்டேல், ஹர்பஜன்சிங் போன்ற வீரர்கள் இருந்ததால் ரசிகர்களே நமக்கு தான் உலக கோப்பை என்ற நம்பிக்கை இருந்தது.

Virender sehwag gives Perfect reply to Yuvraj singh regarding world cup

ஆனால் இம்முறை அப்படி எந்த ஒரு நம்பிக்கையும் ரசிகர்கள் மத்தியில் எழவில்லை. இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் யுவராஜ் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை போல் மீண்டும் நாம் வெற்றி பெற வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறோம். ஆனால் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் கடும் நெருக்கடி ஏற்பட்ட போதும் நாம் ஒரு அணியாக நின்று ஜொலித்தோம்.

இதேபோல் 2023 ஆம் ஆண்டிலும் நன்றாக செயல்பட வேண்டும் என்ற அழுத்தம் இந்திய வீரர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இம்முறை இந்திய அணியால் சிறப்பாக செயல்பட முடியுமா அதற்கான நேரம் இருக்கிறதா. இந்த நெருக்கடியை கேம் சேஞ்சராக நாம் பயன்படுத்த முடியுமா என யுவராஜ் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்த சேவாக் நெருக்கடி என்று ஒன்று வந்தால் அதை நாம் எடுத்துக் கொள்ள மாட்டோம். எதிரணிக்கு தான் நாம் கொடுப்போம் என்று ஷேவாக் பதில் அளித்து இருந்தார்.

மேலும் கடந்த 12 ஆண்டுகளாக எந்த அணி உலக கோப்பையை நடத்துகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்று இருக்கிறார்கள். 2011 ஆம் ஆண்டு நாமும் 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவும் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தும் உலக கோப்பையை வென்றிருப்பதால் இந்த உலக கோப்பை தொடர் நமக்கான நேரம் என்று பதில் அளித்து இருந்தார். ஷேவாக்கின் இந்த பதில் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்து இருக்கிறது

இந்த நிலையில் இதற்கு கருத்து தெரிவித்துள்ள கங்குலி, உலக கோப்பையை இந்தியா நடத்துகிறது என்பதாலே நாம் வெற்றி பெற முடியுமா பலம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை கொண்டுதான் நாம் வெல்ல முடியும். இம்முறை அதற்கான வாய்ப்பு இருக்கிறது ஆனால் அதற்கு முன்பு நாம் வெற்றிப் பாதையை கண்டுபிடிக்க வேண்டும் என கங்குலி பதில் அளித்து இருந்தார்.

Story first published: Thursday, September 7, 2023, 16:40 [IST]
Other articles published on Sep 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+