For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவின் தோல்விக்கு ஜிஎஸ்டி தான் காரணம்.. ஒரே ட்வீட்டில் தெறிக்க விட்ட சேவாக்

Recommended Video

இந்தியாவின் தோல்விக்கு என்ன காரணம்?.. ட்வீட் செய்த சேவாக்- வீடியோ

நியூடெல்லி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் - லெவிஸ் - ஸ்டெர்ன் முறைப்படி இந்திய அணியின் இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

இதனை முன்னாள் வீரர் சேவாக் தனக்கே உரிய பாணியில் ட்விட்டரில் கலாய்த்துள்ளார். அப்படி என்ன கலாய்த்தார்?

மழை குறுக்கிட்டது

மழை குறுக்கிட்டது

சேவாக் என்ன கூறினார் என்பதை பார்க்கும் முன்பு முதல் டி20 யில் இந்தியாவின் இலக்கு எப்படி நிர்ணயிக்கப்பட்டது என பார்க்கலாம். முதலில் பேட்டிங் செய்தது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலிய அணி 16.1 ஓவர்கள் ஆடி முடித்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 17 ஓவர்களில் 158 ரன்கள் எடுத்தது அந்த அணி.

இந்திய அணி இலக்கு மாற்றம்

இந்திய அணி இலக்கு மாற்றம்

டக்வொர்த் - லெவிஸ் - ஸ்டெர்ன் முறைப்படி இந்திய அணியின் இலக்கு 17 ஓவர்களில் 174 என மாற்றப்பட்டது. இதை சேஸ் செய்த இந்தியா 17 ஓவர்கள் முடிவில் 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

அதிக ரன்கள் எடுத்தும் தோல்வி

அதிக ரன்கள் எடுத்தும் தோல்வி

ஆஸ்திரேலியாவை விட இந்தியா அதிக ரன்கள் எடுத்தும் டிஎல்எஸ் முறைப்படி இந்தியா தோல்வி அடைந்தது என்ற விஷயத்தை பிடித்துக் கொண்டார் சேவாக். இதை தன் பாணியில் கூறியுள்ளார்.

இப்படி ஜிஎஸ்டி சேர்த்துட்டீங்களே

"இந்தியா ஆஸ்திரேலியாவை விட அதிகம் ஸ்கோர் எடுத்தும் தோல்வி அடைந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோருடன் ஜிஎஸ்டி சேர்த்து விட்டார்கள். ஆனால், போட்டி சுவாரஸ்யமாக ஆக இருந்தது" என கூறியுள்ளார் சேவாக். ஆஸ்திரேலியா 17 ஓவர்களில் எடுத்த 158 ரன்களோடு 15 ரன்களை டிஎல்எஸ் முறைப்படி சேர்த்துக் கொண்டதை தான் ஜிஎஸ்டி போட்டு விட்டார்கள் என கலாய்த்துள்ளார் சேவாக்.

Story first published: Thursday, November 22, 2018, 16:47 [IST]
Other articles published on Nov 22, 2018
English summary
Virender Sehwag make fun of DLS score at First T20 match between India and Australia
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+