Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடப் போங்கப்பா! அஞ்சு வருஷம் ஆச்சு.. இன்னும் இதையே சொல்லிக்கிட்டு இருக்கீங்க.. சேவாக் கிண்டல்!

டெல்லி : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் அரசியலில் குதிக்கப் போவதாக பரவி வரும் செய்திகள் அனைத்தும் வதந்தி தான் என ட்விட்டரில் வேடிக்கையான முறையில் கூறி இருக்கிறார் சேவாக்.

இந்த ஆண்டு நாடாளுமன்றத்திற்கு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அதை ஒட்டி சில கிரிக்கெட் வீரர்கள் பா.ஜ.க கட்சியில் இணைந்து போட்டியிடுவார்கள் என செய்திகள் வெளியாகி வந்தன.

அரசியலில் குதிக்கும் சேவாக்

அரசியலில் குதிக்கும் சேவாக்

அது போன்ற செய்திகளில் தவறாமல் இடம் பிடித்து வந்தார் வீரேந்தர் சேவாக். இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சேவாக் அரசியலில் குதிக்க உள்ளதாக செய்திகள் வலம் வரத் துவங்கி உள்ளது.

வதந்தி எப்போதும் மாறாது

வதந்தி எப்போதும் மாறாது

இதே போன்ற செய்திகள் 2014 பொதுத் தேர்தலுக்கு முன்பும் வலம் வந்தன. அப்போது சேவாக் அதை மறுத்து வந்தார். தற்போது மீண்டும் வதந்திகள் உலா வரும் நிலையில், சில விஷயங்கள் இந்த வதந்திகள் போல எப்போதும் மாறாது என குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் சேவாக்.

சேவாக் பதிலடி

மேலும், சேவாக் தன் பதிவில் 2014இல் வந்த செய்தியையும், சமீபத்தில் வந்த செய்தியையும் அடுத்தடுத்து பதிவிட்டு எல்லாமே வதந்தி என நெத்தியடியாக கூறியுள்ளார். சேவாக்கின் இந்த பதிவை வரவேற்று ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

விடாமல் துரத்தும் வதந்திகள்

விடாமல் துரத்தும் வதந்திகள்

இது ஒரு புறமிருக்க சேவாக் சும்மா சொல்கிறார். அவர் பாஜக-வுடன் தொடர்பில் இருக்கிறார். எந்த இடத்தில் போட்டியிடுகிறார் என்பது கூட முடிவாகி விட்டது என வதந்திகள் தொடர்ந்து இறக்கை கட்டி பறக்கின்றன.

மற்ற வீரர்கள் யார்?

மற்ற வீரர்கள் யார்?

சேவாக் தவிர்த்து முன்னாள் வீரர் கௌதம் கம்பீர், தோனி, கங்குலி என அரசியலில் குதிக்கப் போகிறார்கள் என வதந்தியில் இடம் பெறும் வீரர்களின் எண்ணிக்கை அதிகம். தோனி பெயர் இந்த வதந்திகளில் அடிபடுவது தான் பெரிய வேடிக்கை.

தோனி ரொம்ப பிஸி

தோனி ரொம்ப பிஸி

தோனி 2019 உலகக்கோப்பையில் ஆடவுள்ளார். அதற்கு முன்பே தேர்தல் நடைபெறும் என்ற சூழலில் தோனி தேர்தலில் நிற்க வாய்ப்பே இல்லை. மேலும், தேர்தல் ஓட்டெடுப்பு சமயங்களில் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. அதிலும் தோனி நிச்சயம் பங்கேற்பார். இந்த சூழலில், தோனி அரசியலில் இப்போதே குதிப்பார் என வதந்திகள் வருவதை என்னவென்று சொல்வது?

Story first published: Friday, February 8, 2019, 19:28 [IST]
Other articles published on Feb 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+