Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கபடி vs கிரிக்கெட் உலக கோப்பை.. இங்கிலாந்து திமிர் பத்திரிகையாளர் மீது சேவாக் சர்ஜிக்கல் அட்டாக்!

டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் யுத்தம் பற்றி அறிந்திராதவர்கள் கூட, சேவாக் மற்றும் யு.கே பத்திரிகையாளர் பியர்ஸ் மோர்கன் நடுவேயான டிவிட்டர் மோதல் பற்றி அறிந்திருப்பார்கள்.

ரியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் தடுமாறியதை மோர்கன் கேலி செய்ததில் ஆரம்பித்தது இந்த சந்தடி சண்டை. கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து இதுவரை ஒரு வேல்ட் கப் கூட வென்றதேயில்லையே என பதிலுக்கு சேவாக் கூறியுதும் பற்றிக்கொண்டது ஃபயர்.

அவ்வப்போது இங்கிலாந்தின் மாஜி கிரிக்கெட் வீரர் ஃபிளிண்டாப் வந்து, மோர்கனுக்கு ஜால்ரா தட்டி, இந்த சண்டைக்கு நெய் வார்த்து செல்வது வழக்கம். போதாத குறைக்கு அமிதாப் பச்சனும், "டேய்.. யாராவது சண்டைக்கு வாங்கடா.." என்ற மோடில், மோர்கனிடம் மோதியதும் நெட்டிசன்களுக்கு மறக்கவில்லை.

ஆரம்பிச்சிட்டாங்க

கொஞ்ச நாட்கள் ஓய்ந்திருந்த இந்த குழாயடி சண்டையை, உலக கோப்பை கபடி புண்ணியத்தால் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கிவிட்டார் சேவாக். கபடி உலக கோப்பையை இந்தியா 8வது முறையாக வென்றதும், சேவாக் வெளியிட்ட ஒரு டிவிட், மொத்த இங்கிலாந்து ரசிகர்களின் வயிற்றையும் கலங்கடித்தது.

அந்த டிவிட் இதுதான்: "கபடியை கண்டுபிடித்த இந்தியா, 8வது முறை உலக சாம்பியனாகியுள்ளது. கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடோ இன்னும் டைப்பிங் மிஸ்டேக்கை சரி செய்வதில்தான் தேறியுள்ளது" என கூறியிருந்தார் சேவாக்.

மோர்கன் திமிர பாருங்க

வெற்றி களிப்பில் இருந்த இந்திய ரசிகர்கள், இந்த டிவிட்டை படு ஸ்பீடாக ரீடிவிட் செய்ய தொடங்கினர். இதுவரை சேவாக்கின் இந்த டிவிட் 29 ஆயிரம் முறை ஷேர் செய்யப்பட்டுள்ளது. சிலர் மோர்கனுக்கு இந்த டிவிட்டை சிசி போட்டு கடுப்பேற்றினர்.

சும்மா இருப்பாரா மோர்கன். கபடி ஒரு விளையாட்டே கிடையாது.. என்று ஒரே போடாக போட்டுள்ளார். "வளந்த பையன்கள் சத்தமிட்டுக்கொண்டே அங்குமிங்கும் ஓடுவதும், ஒருவருக்கொருவர் அடிப்பதும்தான் கபடி" என கபடிக்கு விளக்க உரை எழுதியுள்ளார் மோர்கன். ஆனால் அவரது நாடான இங்கிலாந்து அணி எதற்காக கபடி உலக கோப்பையில் பங்கேற்றது என்பதையும் அவர் விளக்கியிருந்தால், கபடி விளையாட்டா இல்லையா என்பதை உலகம் அறிந்திருக்கும்.

நெட்டிசன்கள் வறுவல்

இதனிடையே சேவாக்கை புகழ்ந்தும், மோர்கனை வாரியும், டிவிட்டரில் பல மீம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சில கேலிகளை இதில் பாருங்கள்:

பேசுவியா.. பேசுவியா.. என கேட்டு மோர்கனை, சேவாக் அடித்து நொறுக்குவது போல இந்த டிவிட் இருந்ததாக கூறுகிறது இந்த நெட்டிசனின் மீம்.

கபடியா இது

இங்கிலாந்து வீரர்கள் கபடி என்றால் என்னவென்றே தெரியாமல் மொக்கையாக ஆடியதை இந்த வீடியோ மீம் இப்படி கேலி செய்கிறது

அந்தோ பரிதாபம்

கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்தின், தற்போதைய கிரிக்கெட் அணியின் நிலையை கேலி செய்கிறது இந்த மீம்

Story first published: Tuesday, October 25, 2016, 12:38 [IST]
Other articles published on Oct 25, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+