Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்-இன் சிறந்த கேப்டன் அவர்.. இந்தியாவின் சிறந்த கேப்டன் இவர்.. சேவாக் சொன்ன ஆச்சரிய காரணம்!!

மும்பை : இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் இந்திய அணியின் சிறந்த கேப்டன்களை வரிசைப்படுத்தியுள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சேவாக், இந்திய அணியின் கேப்டன்கள் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். இந்தப் பேட்டியில் சேவாக் கூறிய சுவாரஸ்யமான பதில்கள் -

உண்மையான தலைவர்

உண்மையான தலைவர்

கிரிக்கெட்டில் உண்மையான தலைவர் (கேப்டன்) என்பது பற்றி பேசிய சேவாக், தன் அணி வீரர்களிடம் இருந்து 100 சதவீதத்தை பெறுபவர்தான் உண்மையான தலைவர் என்றார். அடுத்து ஐபிஎல் தொடரில் யார் சிறந்த கேப்டன் என்பது பற்றி பேசினார்.

ஐபிஎல்-இல் சிறந்த கேப்டன்

ஐபிஎல்-இல் சிறந்த கேப்டன்

ஐபிஎல்-இல் தோனி தான் சிறந்த கேப்டன். அவரது (சென்னை அணியின்) பந்துவீச்சு கூட்டணி இதுவரை கிரிக்கெட்டில் மிக மோசமானது. இருந்தாலும், அவர் தன் வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருகிறார் என்றார்.

கங்குலி தான் பெஸ்ட்

கங்குலி தான் பெஸ்ட்

ஐபிஎல்-இல் தோனியை குறிப்பிட்ட சேவாக், இந்திய அணிக்கு கங்குலி தான் சிறந்த கேப்டனாக விளங்கினார் என்றார். இந்திய அணி மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டில் சிக்கிய பின் கங்குலி நல்ல அணியை உருவாக்கினார். அந்த அணி வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகள் மற்றும் தொடர்களை வென்றது.

கேப்டன்கள் வரிசை

கேப்டன்கள் வரிசை

சேவாக் தான் பார்த்த இந்திய அணியின் சிறந்த கேப்டன்களை வரிசைப்படுத்தினார். கங்குலிக்கு முதல் இடம் கொடுத்த சேவாக், இரண்டாவது இடத்தை தோனிக்கு அளித்தார். விராட் கோலிக்கு மூன்றாம் இடம் மட்டுமே கிடைத்தது.

Story first published: Sunday, April 14, 2019, 10:35 [IST]
Other articles published on Apr 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+