For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னா விளையாட்டு...? ரசிகர்களுடன் ஓடி பிடித்து விளையாடும் சேவாக்... வைரல் வீடியோ

டெல்லி:முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், தமது ரசிகர்களுடன் சேர்ந்து விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி ஆட்டக்காரராக திகழ்ந்தவர் விரேந்தர் சேவாக். தொடக்க வீரராக சச்சின் உடன் களமிறங்கி, எதிரணியினர் பந்து வீச்சை துவம்சம் செய்வார்.

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர், டுவிட்டரில் கணக்கு ஒன்றை தொடங்கினார். அதில் அவர் பதிவு செய்யும் விடியோக்கள், கருத்துகளுக்கு ஏக மாஸ்.

கோலி, ரோஹித் சர்மா.. ஐபிஎல்-ல ஜாக்கிரதையா இருக்கணும்.. ஹர்பஜன் சிங் எச்சரிக்கை! என்னவாம்? கோலி, ரோஹித் சர்மா.. ஐபிஎல்-ல ஜாக்கிரதையா இருக்கணும்.. ஹர்பஜன் சிங் எச்சரிக்கை! என்னவாம்?

டுவிட்டர் வீடியோ

டுவிட்டர் வீடியோ

அவரை பின்தொடர்வர்களின் எண்ணிக்கையும் அதிகம். தற்போது சேவாக் தமது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவுக்கு செம அப்ளாஸ்.

டுவிட்டரில் வைரல்

டுவிட்டரில் வைரல்

அதில் தனது அதிரடி ஆட்டத்தைப் போலவே, டுவிட்களை அள்ளி வீசுவார். இவை சமூக வலைத்தளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.

குறையாத ரசிகர்கள்

குறையாத ரசிகர்கள்

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தற்போது சேவாக் சர்வதேச பள்ளியை தொடங்கி நடத்தி வருகிறார். ஓய்வு பெற்றாலும், ரசிகர்கள் மட்டும் அவருக்கு என்றுமே குறைவது இல்லை.

சந்திக்க விருப்பம்

சந்திக்க விருப்பம்

இந்நிலையில் ரசிகர்கள் சிலர், சேவாக்கை சந்திக்க விரும்பினர். அதனை அறிந்த சேவாக் வித்தியாசமான முறை ஒன்றை கையாண்டார்.

ரசிகர்களுடன் விளையாட்டு

இயல்பான சந்திப்பு என்பதற்கு பதிலாக... அவர்களுடன் விளையாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் சேவாக். இதுதொடர்பான வீடியோவை, தனது டுவிட்டர் பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார். அதற்கு ஏக லைக்ஸ் தான் போங்க..

கைக்குட்டை போட்டி

கைக்குட்டை போட்டி

சிறிய வயதில் பள்ளிகளில், இரு வரிசையாக நின்று கொண்டு விளையாடும் விளையாட்டை அவர் ரசிகர்களுடன் விளையாடி இருக்கிறார். நடுவில் இருக்கும் கைக்குட்டையை எடுத்துக் கொண்டு, எதிரணியினர் தொடுவதற்குள் மீண்டும், புறப்பட்ட இடத்திற்கு செல்லும் விளையாட்டாகும்.

எண்ணிக்கை உயருகிறது

எண்ணிக்கை உயருகிறது

ரசிகர்களுடன் வெகு இயல்பாக, அவர்களில் ஒருவராக சேவாக் விளையாடி இருப்பது இணையத்தில் வைரலாகி உள்ளது. அவரது டுவிட்டர் கணக்கில் பின் தொடர்வர்களின் எண்ணிக்கையையும் இது உயர்த்தி உள்ளது.

Story first published: Monday, March 11, 2019, 16:26 [IST]
Other articles published on Mar 11, 2019
English summary
Virender sehwag remembered his childhood memories, playing with fans.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X