Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சேவாக் பற்றி உலகின் முன்னணி வீரர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

மும்பை: இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் விரேந்திர சேவாக், குறித்து பல முன்னணி வீரர்கள் தங்கள் கருத்தை கூறியுள்ளனர்.

வீரர்கள் கூறியதாவது:

நீங்கள் எவ்வளவு சிறப்பான மற்றும் அனுபவம்மிக்க பவுலராக இருந்தாலும் சரி, உங்கள் எண்ணத்தை சேவாக் சில நிமிடங்களில் மாற்றிப்போட்டுவிடுவார்- ஆஸி. அதிவேக பந்து வீச்சாளர் பிரெட் லீ.

Virender Sehwag retires: Ten special things about Viru

விவ் ரிச்சர்ட்ஸ் ஓய்வு பெற்ற பிறகு, கிரிக்கெட்டில் பொழுதுபோக்கு போய்விட்டது என்று நினைத்தேன். ஆனால், சேவாக் வந்த பிறகு நிலைமாறியது. அவர் பொழுதுபோக்கின் ராஜா- பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமிஸ் ராஜா.

90 ரன்களுக்கு மேல் எடுத்த பிறகு, எப்படி பதற்றமின்றி ரன் குவிப்பது என்பதை நான் சேவாக்கிடமிருந்துதான் கற்க வேண்டும்- மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர்.

எப்போதுமே நான் இருக்கும் அணியில் சேவாக் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில் நான் அவர் பேட் செய்வதை பார்க்கவே ஆசைப்படுகிறேனே தவிர, அவருக்கு பந்து வீச ஆசைப்படவில்லை- சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே.

பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் இல்லை என்று ஒரு காரணத்தை கூறுவது வாடிக்கை. ஆனால், சேவாக் போன்றவர்கள் ஃபார்மை எப்போதும் இழப்பதில்லை- ஆஸி. பேட்ஸ்மேன் மைக் ஹஸ்சி.

நான் பார்த்த அளவில், கணிக்க முடியாத பேட்ஸ்மேன் சேவாக்- ஆஸி. முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத்.

பயப்படாமல் ஆடும் பேட்ஸ்மேன்கள் வரிசையில் உலகின் சிறந்த வீரர் சேவாக்தான்- இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன்.

298 ரன்களில் நிற்கும்போதும், சிக்சர் விளாசுவதெல்லாம், கற்பனை செய்து பார்க்க முடியாதது. பெரும் ஜீனியசாக இருந்தால்தான் அது முடியும்- பாக். பவுலர் வக்கார் யூனிஸ்.

Story first published: Wednesday, October 21, 2015, 13:16 [IST]
Other articles published on Oct 21, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+