Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என் மனதை காயப்படுத்தினார்.. டிரஸிங் ரூமில் ஏற்பட்ட மோதல்.. பேட்டால் சேப்பலுக்கு சேவாக் தந்த பதிலடி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கிரேக் சேப்பல் இருந்தபோது தமக்கும் அவருக்கும் மிகப்பெரிய வாக்குவாதம் ஒன்று ஏற்பட்டதாகவும், அப்போது தான் அவரை கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதாகவும் சேவாக் தெரிவித்திருக்கிறார்.

ஷேவாக்கின் இந்த பேச்சை பார்க்கும் போது, இது 2006 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது நடைபெற்ற சம்பவமாக இருந்திருக்கும். ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தபோது ஷேவாக் சிறிது காலம் டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வந்திருக்கிறார்.

Virender Sehwag

அப்போது சேவாக்கை அழைத்து கிரேக் சேப்பல் பேசியிருக்கிறார். இது குறித்து விவரித்துள்ள ஷேவாக் கிரேக் சேப்பல் அழைத்து பேசிய விதம் எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது. அப்போது நான் சரியாக விளையாடவில்லை. இதற்கு நான் கால்களை சரியாக நகர்த்தாமல் விளையாடுவது தான் காரணம் என்று கூறி ஏளனம் செய்தார்.

அதற்கு நான் எனது ஸ்டைலில் விளையாடி தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000 ரன்கள் அடித்து இருக்கின்றேன் என்று கூறினேன். அப்போது, நீங்கள் கால்களை சரியாக நகர்த்த வில்லை என்றால் ரன்கள் அடிக்க மாட்டீர்கள். அப்போது நான் அணியிலிருந்து உங்களை நீக்கி விடுவேன் என்று கூறினார். அதற்கு நானும் அவரை திட்டினேன். எங்களுக்கு இடையே வாக்குவாதம் பெரியதாக மாறியது.

இதை அடுத்து கேப்டனாக இருந்த டிராவிட் தான் எங்களை சமாதானப்படுத்தினார். அடுத்த நாள் டெஸ்ட் போட்டியின் போது நான் தொடக்க வீரராக களம் இறங்கினேன். அப்போது கிரேக் சேப்பல் நீ சரியாக விளையாடவில்லை என்றால் உன்னை அணியை விட்டு நீக்கி விடுவேன் என்று கூறினார். ஒரு பேட்ஸ்மேன் களத்திற்கு செல்லும் போது இது போன்ற வார்த்தையை கேட்டுவிட்டு சென்றால் எப்படி இருக்கும்.

ஆனால் நான் முதல் பந்தில் இருந்து அடித்து ஆடினேன். மதிய உணவு இடைவெளிக்கு முன்பு 99 ரன்களை அடித்திருந்தேன். அப்போது மீண்டும் ட்ரெஸ்ஸிங் ரூம்க்கு வந்தபோது ராகுல் டிராவிட்டை பார்த்து, உனது பயிற்சியாளர் என் பக்கமே வரக்கூடாது பார்த்துக் கொள். இல்லையென்றால் நடப்பதே வேறு என்று கோபமாக சொல்லிவிட்டு மீண்டும் களத்திற்கு சென்று 184 ரன்கள் குவித்தேன்.

அதன்பின் ட்ரெஸ்ஸிங் ரூம் வந்தவுடன் என் காலை நகர்த்துகிறேனோ, இல்லையோ எனக்கு எப்படி ரன்கள் சேர்க்க வேண்டும் என்று நன்றாக தெரியும் என்று ட்ரெஸ்ஸிங் ரூமில் வந்து அவரை பார்த்து கத்திவிட்டு சென்றேன் என்று ஷேவாக் கூறி உள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 104 டெஸ்டில் விளையாடியுள்ள ஷேவாக் 8,586 ரன்கள் அளித்துள்ளார். அவருடைய சராசரி 49.34 என்ற அளவில் இருக்கிறது இதில் 23 சதம், 32 அரை சதமும் அடங்கும். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள ஷேவாக் நான்கு இரட்டை சதமும் அடித்துள்ளார்.

Story first published: Saturday, August 23, 2025, 23:56 [IST]
Other articles published on Aug 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+