Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நிறைய இறுதி போட்டிகள்ல பங்கேற்கணும்... டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஷேவாக்கின் வாழ்த்து!

துபாய் :துபாய் சர்வதேச மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி மும்பை இந்தியன்சை எதிர்கொள்ளவுள்ளது.

முதல் முறையாக டெல்லி கேபிடல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு இந்த தொடரில் முன்னேறியுள்ளது.

இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி அதிகமான இறுதிப்போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று முன்னாள் துவக்க வீரர் வீரேந்திர ஷேவாக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Virender Sehwags hilarious wish for IPL 2020 finalists Delhi Capitals

டெல்லி கேபிடல்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் இந்த சீசனில் நுழைந்துள்ளது. நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்நிலையில் முன்னாள் துவக்க வீரர் வீரேந்திர ஷேவாக் அந்த அணி மேலும் பல பைனல்ஸ்களை சந்திக்க வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் அந்த அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பல இறுதிப்போட்டிகளை சந்திக்கவும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் ஐபிஎல்லில் இதே அணிக்காக டெல்லி டேர்டெவில்ஸாக இருந்தபோது விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, November 9, 2020, 18:31 [IST]
Other articles published on Nov 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+