Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னை பற்றி தங்களுக்கு தெரியாததா.. இரண்டே வரியில் பயோ அனுப்பிய சேவாக்.. ஷாக்கான பிசிசிஐ

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் நேர்காணலுக்கு, வெறும் இரண்டே வரிகளில் பயோடேட்டா அனுப்பியுள்ளார் வீரேந்திர சேவாக்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு, தற்போது தலைமை பயிற்சியாளராக செயல்படுபவர் அனில்கும்ப்ளே. அவரது பதவிக்காலம் இம்மாதம் 18ம் தேதியோடு நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய பயிற்சியாளருக்கான தேடுதலை பிசிசிஐ தொடங்கியுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், அதிரடி பேட்ஸ்மேனுமான வீரேந்திர சேவாக்கும், இப்பதவிக்கு விண்ணப்பம் அளித்துள்ளார். இதையடுத்து நேர்காணலுக்கான பயோடேட்டாவை சேவாக் அனுப்பியுள்ளார்.

பிசிசிஐக்கு ஷாக்

பிசிசிஐக்கு ஷாக்

பயோடேட்டா என்றால் இரண்டு பக்கத்திற்காவது நீளும் என எதிர்பார்த்திருந்த பிசிசிஐ அதிகாரிகளுக்கு ஷாக். காரணம், சேவாக் வெறும், இரண்டே இரண்டு வரிகளில் தன்னை பற்றி சுய குறிப்பு எழுதியனுப்பியுள்ளார். சேவாக் என்றால் உலகத்திற்கே தெரியுமே, நமக்கு ஏன் சுய குறிப்பு என நினைத்துவிட்டாரோ என்னவோ.

ஏற்கனவே விளையாடியுள்ளேன்

ஏற்கனவே விளையாடியுள்ளேன்

சுய குறிப்பில், ஐபிஎல் தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் உள்ளேன். இப்போதுள்ள இந்திய வீரர்களுடன் முன்பு விளையாடியுள்ளேன். இவ்வளவுதான் தெரிவித்துள்ளார் சேவாக்.

நேர்காணல்

நேர்காணல்

இதையடுத்து மீண்டும் பெரிய ஒரு பயோவை ரெடி செய்து அனுப்பும்படி பிசிசிஐ சேவாக்கிற்கு அறிவுறுத்தியுள்ளது. புதிய பயிற்சியாளருக்கான நேர் காணல் லண்டனில் வைத்து நடைபெற உள்ளது.

ஜாம்பவான்கள்

ஜாம்பவான்கள்

பயிற்சியாளர் நேர்காணலின்போது, சச்சின் டெண்டுல்கர், கங்குலி, லட்சுமணன் ஆகிய மூவர் கொண்ட கமிட்டி பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும். இதை மூன்றாவது ஒரு நபரை வைத்து கண்காணிக்கும் பிசிசிஐ.

Story first published: Tuesday, June 6, 2017, 13:08 [IST]
Other articles published on Jun 6, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+