ஓ.. காட்.. ஷேவாக்கு இப்படி ஒரு நிலையா.. வெறும் ரூ. 3.2 கோடிக்கு விலை போனார்!
பெங்களூர்: ஒரு காலத்தில் அதிரடி வீரராக திகழ்ந்து வந்த வீரேந்திர ஷேவாக் இன்று சரிவுக்குப் போய் விட்டார். டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் வேண்டாம் என்று நிராகரிக்கப்பட்ட அவரை ரூ. 3.2 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
டெல்லி வீரரான ஷேவாக்குக்கு அடிப்படை ஏலத் தொகை ரூ. 2கோடியாகும். அதை விட ஜஸ்ட் 1. 2 கோடிக்கு அதிகமாகத்தான் விலை போயுள்ளார் ஷேவாக்.
வெளிநாட்டு வீரர்கள் பெரிய பெரிய விலைக்குப் போன நிலையில் ஷேவாக் குறைந்த விலைக்குப் போயுள்ளது ஆச்சரியம்தான்.

அதிரடி வீரர்
அதிரடி வீரராக களத்தில் ஜொலித்தவர் ஷேவாக். அவர் நின்றாலே, எதிரணியினர் கிலியுடன்தான் பந்து வீசினர்.

டெல்லிக்காக ஆடியவர்
டெல்லி வீரரான ஷேவாக், டெல்லி டேர்டெவில்ஸ் வீரராக இத்தனை காலமும் இருந்து வந்தவர்.

நிராகரிக்கப்பட்டார்
ஆனால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி கடந்த போட்டிகளில் படு கேவலமாக ஆடியதால் இந்த ஆண்டு அந்த அணியைக் கூண்டோடு கலைத்து விட்டனர். அதாவது அத்தனை வீரர்களையும் வெளியேற்றி விட்டனர். இதையடுத்து மொத்தமாக அத்தனை வீரர்களையும் அந்த அணி ஏலத்தில் இந்த முறை எடுக்கிறது.

பஞ்சாபுக்குக் கைமாறிய ஷேவாக்
இதனால் ஏலத்திற்கு வந்த ஷேவாக்கை இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ. 3. 2கோடிக்கு எடுத்தது.

ஏற்கனவே அணி மாறி விட்ட கம்பீர்
ஷேவாக்கின் சக வீரரான கெளதம் கம்பீர் டெல்லி அணியின் கேப்டனாக இருந்தவர். ஆனால் அவர் கடந்த சில தொடர்களாக கொல்கத்தாவுக்கு மாறிப் போய் ஆடி வருகிறார். இந்தநிலையில் தற்போது ஷேவாக்கும் பஞ்சாபுக்கு மாறி விட்டார்.


Click it and Unblock the Notifications