Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷேவாக்குக்கு மறுபடியும் காயம்-அணியிலிருந்து நீக்கம்-திணேஷ் கார்த்திக் சேர்ப்பு

Virendra Shewag
மும்பை: தொடர் காயத்தால் கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வரும் வீரேந்திர ஷேவாக்குக்கு மறுபடியும் காயம் ஏற்பட்டு விட்டது. இதையடுத்து ஆசியா கோப்பைப் போட்டியிலிருந்து அவர் நீக்கப்பட்டு திணேஷ் கார்த்திக்கை சேர்த்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி காயப்பட்டு வருகிறார் ஷேவாக். இதனால் பல முக்கியப் போட்டிகளில் அவர் கலந்து கொள்ளவில்லை. சமீபத்தில் நடந்த டுவென்டி 20 உலகக் கோப்பைத் தொடரிலும், ஜிம்பாப்வேயில் நடைபெற்ற ஒரு நாள் முத்தரப்புத் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் கொழும்பில் நடந்து வரும் ஆசியா கோப்பை கிரிக்கெட் தொடரில் அவர் இடம் பெற்றிருந்தார். முதல் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக சிறப்பாக பந்து வீசினார். பேட்டிங்கில் சொதப்பினார்.

பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை நடந்த போட்டியின்போது பேட் செய்யவே முடியாமல் திணறினார். 10 ரன்களை எடுப்பதற்குள் 30 பந்துகளை சாப்பிட நேர்ந்தது. இதையடுத்து பை ரன்னராக சுரேஷ் ரெய்னாவை வைத்துக் கொண்டு ஆடினார்.

இந்த நிலையில், அவர் தற்போது அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் காயமடைந்திருப்பதால் இலங்கையுடன் நாளை நடைபெறும் கடைசி லீக் போட்டி மற்றும் 24ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் ஷேவாக் பங்கேற்க மாட்டார் என கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஷேவாக்குக்குப் பதில் அணியில் திணேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. அடுத்த பத்து நாட்களுக்கு ஷேவாக் ஓய்வில் இருப்பாராம்.

நெஹ்ராவுக்கு முதுகு வலி

இதற்கிடையே, முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த வேகப் பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா தற்போது குணமடைந்துள்ளதாக அணியின் பிசியோ பிஸ்வால் கூறியுள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+