Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்தடுத்து ட்விஸ்ட்.. 2வது ODI போட்டிக்கான பிட்ச்-ல் சுவாரஸ்ய அம்சம்.. ரசிகர்களுக்கு விருந்து ரெடி

விசாகப்பட்டினம்: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது போட்டிக்கான பிட்ச்-ல் இந்திய வீரர்களுக்கு பெரும் சவால் காத்துள்ளது. அவர்களுக்கே தெரியாத ட்விஸ்ட்கள் ஏற்படலாம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இதனையடுத்து இரு அணிகளும் மோதும் 2வது ஒருநாள் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடரை கைப்பற்ற வேண்டும் என இந்திய வீரர்களும், தோல்விக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய வீரர்களும் முனைப்புடன் உள்ளனர்.

 பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

இந்நிலையில் இந்த சுவாரஸ்யங்களுடன் சேர்த்து பிட்ச்-லும் பரபரப்பு இருக்கிறது. விசாகப்பட்டினம் மைதானம் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு உதவக்கூடியதாக இருக்கும். மும்பையில் பிட்ச்-ல் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக ஸ்விங் செய்து அசத்தினர். ஆனால் விசாகப்பட்டினத்தில் பிட்ச் ஸ்லோவாக இருக்கும் என்பதால் ஸ்பின்னர்கள் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

புள்ளிவிவரங்கள்

புள்ளிவிவரங்கள்

இந்த மைதானத்தில் இதுவரை நடந்துள்ள 9 ஒருநாள் போட்டிகளில் 5 முறை 2வது பேட்டிங் செய்த அணி தான் வெற்றி கண்டுள்ளது. ஏனென்றால் 2வது இன்னிங்ஸில் அதிக பனிப்பொழிவு இருக்கும் என்பதால் பந்துவீச்சாளர்களுக்கு சவால் இருக்கும். இங்கு முதலில் ஆடும் அணி சராசரியாக 250 ரன்கள் வரை குவிக்கலாம் எனத்தெரிகிறது. எனவே டாஸ் வெல்லும் அணி பெரும்பாலும் பந்துவீச்சை தேர்வு செய்ய தான் வாய்ப்புள்ளது.

மழைப்பொழிவு

மழைப்பொழிவு

இது ஒருபுறம் இருக்க, போட்டி நடைபெறும் நாளின் போது மழைப்பொழிவு இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. போட்டியின் ஓவர்கள் குறைக்கப்படலாம். எனவே இரு அணிகளுமே தொடக்கத்தில் இருந்தே சற்று வேகமாக ரன்குவிக்க வேண்டியிருக்கும். இல்லையென்றால் கடைசி நேரத்தில் ஓவர்கள் குறைத்து அழுத்தங்கள் ஏற்பட்டுவிடலாம்.

ரோகித் கம்பேக்

ரோகித் கம்பேக்

மற்றபடி விசாகப்பட்டினம் மைதானம் மிகவும் சிறிய பவுண்டரிகளை கொண்டதாகதான் இருக்கும். ஹர்திக் பாண்ட்யா, க்ளென் மேக்ஸ்வெல் போன்ற பவர் ஹிட்டர்கள் நினைத்தால் சிக்ஸர் மழையை காட்டலாம். இதற்கேற்றார் போலவே இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவும் இந்த போட்டியில் அணிக்கு திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, March 18, 2023, 17:53 [IST]
Other articles published on Mar 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+