கருணாநிதி கிரேட்.. தீவிர விளையாட்டு ரசிகர்.. விஸ்வநாதன் ஆனந்த் உருக்கம்!
டெல்லி: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, சூப்பர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். கருணாநிதி கிரேட். தீவிர விளையாட்டு ரசிகர் என்று ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி நேற்று முன்தினம் இரவு காலமானார். இந்த செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே, டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்.
மரியாதைக்குரிய கருணாநிதி உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். தமிழக அரசியலில் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவர். என்னுடைய வாழ்நாளில் அவரை சந்திக்கும் வாய்ப்பு பலமுறை கிடைத்தது. நான் முதல் முறையாக உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றபோது, எனக்கு பாராட்டு விழா நடத்தி, ஒரு செஸ் செட் பரிசாக அளித்தார். அதை எப்போதும் மறக்க முடியாது என்று ஆனந்த் கூறியுள்ளார்
Story first published: Thursday, August 9, 2018, 12:13 [IST]
Other articles published on Aug 9, 2018


Click it and Unblock the Notifications