Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

1983ல் உலக கோப்பையை அதிருஷ்டத்தால் இல்லை.. திறமையால்தான் வென்றது இந்தியா: விவ் ரிச்சர்ட்ஸ்

துபாய்: 1983ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா வெல்லும் அளவுக்கு தகுதியானதாகவே இருந்தது என்று விவ் ரிச்டர்ஸ்ட் தெரிவித்துள்ளார்.

1983ம் ஆண்டு உலக கோப்பையில், கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலக சாம்யன் பட்டத்தை வென்றது. இறுதி போட்டியில், அப்போதைய நடப்பு சாம்பியன் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்தது இந்தியா. 2 உலக கோப்பைகளில் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகள், 3வது உலக கோப்பையை இந்தியாவிடம் பறிகொடுத்தது.

அதிருஷ்டத்தால் கிடைத்த வெற்றியா..

அதிருஷ்டத்தால் கிடைத்த வெற்றியா..

அப்போது மேற்கிந்திய தீவுகள் அணி அசைக்க முடியாத பலம் கொண்டதாக இருந்தது. எனவே இந்தியாவின் வெற்றியை பலரும் அதிருஷ்டத்தில் கிடைத்ததாகவே கூறிவந்தனர். ஆனால், அப்போதைய மே.இ.தீவுகள் அணியின் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமாகிய, விவ் ரிச்சர்ட்ஸ், இதை மறுக்கிறார்.

கபில்தேவ் காரணம்

கபில்தேவ் காரணம்

இதுபற்றி விவ் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளதாவது: 1983ம் ஆண்டில், இந்திய அணி, ஒருநாள் அரங்கில் பெரிதும் அறியப்படாத அணியாகவே இருந்தது. ஆனால், நான் பெரிதும் வியக்கும் வீரரான கபில்தேவ், இந்திய அணியை உலக சாம்பியனாகவே மாற்றிக் காண்பித்தார். இந்திய வீரர்களுக்கு சுய நம்பிக்கையை ஊட்டியதே கபில்தேவ்தான்.

வெதர் டஃப்பா இருந்தது..

வெதர் டஃப்பா இருந்தது..

இறுதி போட்டியில் எங்கள் அணி வெற்றிபெறும் வாய்ப்போடுதான் இருந்தது. ஆனால் தட்பவெப்பம், பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்ததை இந்திய வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர். லாட்ஸ்ட் மைதானத்தின் இதமான தட்பவெட்பத்துக்கு ஏற்ப, இந்திய பந்து வீச்சாளர்கள் மதன்லால், ரோஜர் பின்னி, மொகிந்தர் அமர்நாத், பல்விந்தர் சந்து போன்றோர் ஒத்திசைந்து போயினர். மிதவேகமாக வீசும் அவர்கள் பந்து நன்கு ஸ்விங் ஆனது. எனவேதான் வெற்றி வாய்ப்பு எங்களுக்கு பறிபோனது.

கபில் தேவை தவிர யாராலும் ம்ஹூம்..

கபில் தேவை தவிர யாராலும் ம்ஹூம்..

ஆனால் நன்கு ஆடிக்கொண்டிருந்த எனது கேட்சை கபில்தேவ் பிடித்து காலி செய்துவிட்டார். அந்த கேட்சை கபில் தேவை த் தவிர வேறு எந்த ஃபீல்டராலும் பிடித்திருக்க முடியாது என்பது எனக்கு தெரியும். இந்த கேட்சை வைத்தே, அவரின் நம்பிக்கையை நான் எடைபோட்டுக் கொண்டேன்.

தகுதியுள்ள அணி

தகுதியுள்ள அணி

இறுதிபோட்டியில் இந்தியா வெற்றிபெற்றபிறகு இரவு அவர்கள் நடத்திய ஆட்டம், பாட்டம் இன்னும் எனக்கு நினைவு இருக்கிறது. தபலா, டிரம்ஸ் போன்றவற்றை அடித்து கிழித்துவிட்டனர். அதேநேரம் நான் வெறுப்படையவில்லை. ஒரே தொடரில் இருமுறை உலக சாம்பியன் அணியை தோற்கடித்த ஒரு அணிக்கு உலக கோப்பை செல்வதுதான் சரியானதாக இருக்க முடியும். இந்திய அணி, அந்த உலக கோப்பையை வெல்ல தகுதி வாய்ந்த அணியாகவே இருந்தது. இவ்வாறு ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, January 24, 2015, 16:44 [IST]
Other articles published on Jan 24, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+