Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர்- நியூ. அணி அறிவிப்பு! முன்ரோவுக்கு இடம் இல்லை!!

நேப்பியர்: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.. அந்த அணியில் முன்ரோ இடம்பெறவில்லை.

டோணி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட நியூசிலாந்து சென்றுள்ளது.

இருநாடுகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற 19-ந்தேதி நேப்பியரில் நடைபெற உள்ளது.

மற்ற 4 போட்டிகள்..

மற்ற 4 போட்டிகள்..

இதை தொடர்ந்து 22, 25, 28 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மற்ற போட்டிகள் நடைபெறுகிறது.

நியூஸி அணி அறிவிப்பு

நியூஸி அணி அறிவிப்பு

இந்நிலையில் ஒருநாள் போட்டி தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்ரோவுக்கு இடம் இல்லை

முன்ரோவுக்கு இடம் இல்லை

பேட்ஸ்மேன் முன்ரோ இந்த அணியில் இடம்பெறவில்லை.

சவுத்தி ஓகே

சவுத்தி ஓகே

காயத்தில் இருந்து குணமடைந்து இருப்பதால் வேகப்பந்து வீரர் சவுத்தி அணியில் இடம்பிடித்திருக்கிறார்.

யார் யார்?

யார் யார்?

இன்று அறிவிக்கப்பட்ட நியூசிலாந்து அணி வீரர்கள் விவரம்:

மெக்கல்லம் (கேப்டன்), குப்தில், ரைடர், வில்லியம் சன், ரோஸ் டெய்லர், கோரி ஆண்டர்சன், லுகே ரோன்ஜி, ஜிம்மி நீசம், நாதன் மெக்கல்லம், டிம் சவுத்தி, மில்ஸ், மெக்லகன், ஆடம் மிலின்.

சைமன்டவுல் கருத்து

சைமன்டவுல் கருத்து

இதனிடையே நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சைமன்டவுல் இப்போட்டி குறித்து கருத்து தெரிவிக்கையில், இந்திய அணியில் இளம்வீரர்கள் எந்த ஆடுகளத்திலும் விளையாடும் திறமை படைத்தவர்கள். அனைவருமே அதிரடி ஆட்டக்காரர்களாக உள்ளனர். ஐபிஎல் போட்டியில் மிட்செல் ஜான்சன், ஸ்டெய்ன் ஆகியோரின் வேகத்தை எதிர்கொண்டு நல்ல பார்மில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

மலையை கடக்கனும்..

மலையை கடக்கனும்..

இந்திய வீரர்களை எதிர்கொள்வது நியூசிலாந்து வீரர்களுக்கு பெரிய மலையை கடப்பது போன்று இருக்கும். ஸ்டூவர்ட் பின்னி மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக உள்ளார். அவருடைய பந்துவீச்சு நியூசிலாந்தில் நன்கு எடுபடும் என்று நான் கருதுகிறேன்.

நியூசி சுணக்கம்

நியூசி சுணக்கம்

நியூசிலாந்து வீரர்களை பொறுத்தவரை விக்கெட்டுகளுக்கு இடையே ஓடி ரன் சேர்ப்பதில் சுணக்கம் காட்டுகிறார்கள். அதனை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

தூண்கள்

தூண்கள்

மார்ட்டின் குப்தில், ஜெசி ரைடர், ஆடம் மில்னி, வில்லியம்சன் ஆகியோர் நியூசிலாந்து அணிக்கு தூணாக விளங்குவார்கள். இவ்வாறு சைமன்டவுல் கூறியுள்ளார்.

Story first published: Thursday, January 16, 2014, 8:11 [IST]
Other articles published on Jan 16, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+