Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன பண்ணி வைச்சுருக்கீங்க? பவுலர்கள் செய்த காரியம்.. ஈஸியாக வென்ற எதிரணி!

கிங்ஸ்டவுன் : வின்சி பிரீமியர் லீக் தொடரில் நடந்த லீக் போட்டியில் வையிடு பந்தாக வீசி எதிரணியை ஜெயிக்க வைத்தது ஃபோர்ட் சார்லட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி.

வின்சி பிரீமியர் லீக் என்ற பத்து ஓவர் லீக் தொடர் வெஸ்ட் இண்டீஸின் ஒரு பகுதியான செயின்ட் வின்சென்ட் அண்ட் கிரெனடின்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் தான் வையிடு ரன்கள் மூலம் 14 ரன்கள் கொடுத்து, மொத்தம் 20 எக்ஸ்ட்ரா ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தது ஃபோர்ட் சார்லட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி.

பத்து ஓவர்கள் லீக்

பத்து ஓவர்கள் லீக்

பத்து ஓவர்கள் போட்டிகள் கொண்ட டி10 லீக் தொடரான வின்சி பிரீமியர் லீக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் சிலரும் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் ஃபோர்ட் சார்லட் ஸ்ட்ரைக்கர்ஸ் - டார்க் வியூ எக்ஸ்ப்ளோரர்ஸ் அணிகள் மோதின.

டக் அவுட்

டக் அவுட்

இந்தப் போட்டியில் ஃபோர்ட் சார்லட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் ஸ்காட் 7 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இன்னும் எடுக்காமல், பந்துகளையும் வீணடித்ததால் அந்த அணிக்கு அழுத்தம் ஏற்பட்டது.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

மற்றொரு துவக்க வீரர் போப் 23 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். ரென்ரிக் வில்லியம்ஸ் 14 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். ஸ்டோவ் 6 பந்துகளில் 13 ரன்கள் எடுக்க ஃபோர்ட் சார்லட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 10 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 75 ரன்கள் எடுத்தது.

ரன் ரேட் உயர உதவி

ரன் ரேட் உயர உதவி

டார்க் வியூ அணி பேட்ஸ்மேன்கள் நிதானமாகவே ரன் சேர்த்தனர். எனினும், ஃபோர்ட் சார்லட் அணி பந்துவீச்சாளர்கள் அவ்வப்போது வையிடு பந்துகள் வீசி டார்க் வியூ அணியின் ரன் ரேட் உயர உதவினர். கிர்டன் லாவியா என்ற பந்துவீச்சாளர் மோசமாக பந்து வீசினார்.

ஒரே ஓவரில்..

ஒரே ஓவரில்..

கிர்டன் லாவியா ஒரே ஓவரில் ஒரு வையிடு பந்து மற்றும் நோ பால் பந்து ஃபோர் செல்லவும் காரணமாக இருந்தார். அவரது ஒரே ஓவரில் 20 ரன் எடுத்தது டார்க் வியூ அணி. வையிடு ரன்களை வைத்து 8.3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது டார்க் வியூ அணி.

20 ரன்கள்

20 ரன்கள்

ஃபோர்ட் சார்லட் அணி எக்ஸ்ட்ராஸ் மூலம் மட்டுமே 20 ரன்கள் கொடுத்தது. டார்க் வியூ அணியில் பேட்டிங் ஆடிய நான்கு வீரர்களுமே 20 ரன்களை தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக ஜேம்ஸ் 18 ரன்கள் எடுத்து இருந்தார்.

வெற்றி பெற்று இருக்கலாம்

வெற்றி பெற்று இருக்கலாம்

ஃபோர்ட் சார்லட் அணி 75 ரன்கள் எடுத்த நிலையில், நிச்சயம் கட்டுக் கோப்பாக பந்து வீசி இருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும். டார்க் வியூ அணி அதிரடி ஆட்டமே ஆடவில்லை. அதை பயன்படுத்தாமல் ஃபோர்ட் சார்லட் சொதப்பி எதிரணியை வெற்றி பெற வைத்தது.

Story first published: Saturday, May 23, 2020, 18:01 [IST]
Other articles published on May 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+