Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

21 ஃபோர்.. 7 சிக்ஸ்.. 20 ஓவரில் 212 ரன்.. கடைசி ஓவர் த்ரில்.. ரொம்ப நாளைக்கு அப்புறம் செம மேட்ச்!

கிங்ஸ்டவுன் : 20 ஓவரில் 212 ரன்கள் குவித்து, கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வரை சென்று, நீண்ட காலம் கழித்து ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்தது அந்த டி10 போட்டி.

Recommended Video

VPL 2020 : Dark View Explorers vs La Soufriere Hikers match 4

வின்சி பிரீமியர் லீக் எனும் டி10 தொடர் வெஸ்ட் இண்டீஸ்-இல் உள்ள செயின்ட் வின்சென்ட் அண்ட் கிரெனடின்ஸ் எனும் நாட்டில் நடந்து வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக நீண்ட காலமாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாத நிலையில், இந்த சிறிய தொடர் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

பத்து ஓவர் போட்டிகள்

பத்து ஓவர் போட்டிகள்

பத்து ஓவர் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆறு அணிகள் பங்கேற்றுள்ளன. முதலில் லீக் சுற்று நடைபெற்று வருகிறது. முதல் நாள் மூன்று போட்டிகள் நடந்த நிலையில், இரண்டாம் நாள் மூன்று லீக் போட்டிகள் நடைபெற்றன.

நூறு ரன்கள்

நூறு ரன்கள்

இரண்டாம் நாள் நடந்த முதல் போட்டியில் டார்க் வியூ எக்ஸ்ப்ளோரர்ஸ் - லா சூஃப்ரேர் ஹைக்கர்ஸ் அணிகள் மோதின. முதல் நாள் நடைபெற்ற போட்டிகளில் எந்த அணியும் 10 ஓவர்களில் நூறு ரன்களை தாண்டாத நிலையில், இந்தப் போட்டியில் இரண்டு அணிகளுமே நூறு ரன்களை தாண்டின.

ஹைக்கர்ஸ் அணி பேட்டிங்

ஹைக்கர்ஸ் அணி பேட்டிங்

முதலில் ஹைக்கர்ஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியில் மூன்று பேட்ஸ்மேன்கள் மட்டுமே சிறப்பாக ரன் குவித்தனர். சல்வான் பிரவுன் 16 பந்துகளில் 23 ரன்கள், தில்லான் டக்ளஸ் 20 பந்துகளில் 40 ரன்கள், டீன் பிரவுன் 10 பந்துகளில் 17 ரன்கள் குவித்தனர்.

கிரீவ்ஸ் அபார பவுலிங்

கிரீவ்ஸ் அபார பவுலிங்

ஹாக்ஷா மற்றும் பென்டிக் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். 10 ஓவர் முடிவில் ஹைக்கர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் குவித்தது. கிரீவ்ஸ் ஒரே ஓவரில் 3 விக்கெட் உட்பட 4 விக்கெட் வீழ்த்தினார். அந்த விக்கெட் வீழ்ச்சியால் கடைசி இரண்டு ஓவர்களில் ஹைக்கர்ஸ் அணி அதிரடி ஆட்டம் ஆட முடியாமல் போனது.

அபார துவக்கம் அளித்தனர்

அபார துவக்கம் அளித்தனர்

அடுத்து ஆடிய டார்க் வியூ எக்ஸ்ப்ளோரர்ஸ் அணிக்கு கிரீவ்ஸ் - லிண்டன் ஜேம்ஸ் அபார துவக்கம் அளித்தனர். கிரீவ்ஸ் 17 பந்துகளில் 20 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த ஜோசப் 5 பந்துகளில் 3 மட்டுமே எடுத்தார். ஜேம்ஸ் - ஹூப்பர் இணைந்து அதிரடியாக ரன் குவித்தனர்.

கடைசி ஓவரில் 13 ரன்கள்

கடைசி ஓவரில் 13 ரன்கள்

கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வரை போட்டியை எடுத்துச் சென்றனர். அப்போது அதிரடி ஆட்டம் ஆடி வந்த ஜேம்ஸ் ஆட்டமிழந்தார். அவர் 29 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதை அடுத்து அந்த அணி இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்தது.

ஹைக்கர்ஸ் அணி வெற்றி

ஹைக்கர்ஸ் அணி வெற்றி

ஹைக்கர்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் எக்ஸ்ப்ளோரர்ஸ் அணியை வீழ்த்தியது. இதை தொடர்ந்து ஹைக்கர்ஸ் அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முன்னேறியது. எக்ஸ்ப்ளோரர்ஸ் அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது.

Story first published: Sunday, May 24, 2020, 11:22 [IST]
Other articles published on May 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+