Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவ்ளோ நேரம்லாம் வெயிட் பண்ண முடியாது.. 17 பந்தில் 36 ரன்.. தனி ஆளாக மேட்ச்சை முடித்த ஷாலோ!

கிங்ஸ்டவுன் : ஹைரான் ஷாலோ 17 பந்துகளில் 36 ரன்கள் குவித்து தன் அணியை எளிதாக வெற்றி பெற வைத்தார்.

Recommended Video

VPL 2020 : Botanic Gardens Rangers vs Grenadines Divers match 6

பத்து ஓவர் போட்டிகளை கொண்ட வின்சி பிரீமியர் லீக் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இடையே நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் செயின்ட் வின்சென்ட் அண்ட் கிரெனடின்ஸ் நாட்டில் நடைபெற்று வருகின்றன.

ஆறாவது போட்டி

ஆறாவது போட்டி

இந்த தொடரின் லீக் சுற்றில் ஆறாவது போட்டி பொட்டானிக் கார்டன் ரேஞ்சர்ஸ் - கிரெனடின்ஸ் டைவர்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் பொட்டானிக் கார்டன்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.

கிரெனடின்ஸ் டைவர்ஸ் பேட்டிங்

கிரெனடின்ஸ் டைவர்ஸ் பேட்டிங்

கிரெனடின்ஸ் டைவர்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணியின் துவக்க வீரர் வெயின் ஹார்ப்பர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடினார். ஆனால், அவர் 22 பந்துகளில் 22 ரன்கள் மட்டுமே எடுத்தார். மற்ற வீரர்களும் பெரிதாக ரன் குவிக்கவில்லை.

66 ரன்கள்

66 ரன்கள்

ஷேம் பிரவுன் 13 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார். போப் 11 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் தான் ரன் எடுத்தனர். இதை அடுத்து கிரெனடின்ஸ் டைவர்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஷாலோ - கரன்சி

ஷாலோ - கரன்சி

அடுத்து பொட்டானிக் கார்டன் அணி சேஸிங் செய்யத் துவங்கியது. அந்த அணிக்கு ஹைரான் ஷாலோ - ரோமல் கரன்சி துவக்கம் அளித்தனர். பெயருக்கு ஏற்றார் போல ரன்களை கரன்சியாக அள்ளாமல் டக் அவுட் ஆனார் கரன்சி.

அதிரடி ஜோடி

அதிரடி ஜோடி

அடுத்து ஜோய் வெல்கம் 9 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கெவின் ஆபிரகாம், ஷாலோவுடன் இணைந்து அதிரடியாக ஆடினர். ஆபிரகாம் 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். அவர் வெளியேறிய பின்னரும் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார் ஷாலோ.

பொட்டானிக் கார்டன் வெற்றி

பொட்டானிக் கார்டன் வெற்றி

துவக்க வீரரான ஷாலோ கடைசி வரை களத்தில் நின்று 17 பந்துகளில் 36 ரன்கள் குவித்து பொட்டானிக் கார்டன் அணியை வெற்றி பெற வைத்தார். 7.3 ஓவர்களில் பொட்டானிக் கார்டன் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

ஷாலோ அதிரடி

ஷாலோ அதிரடி

அதிரடி ஆட்டம் ஆடிய ஹைரான் ஷாலோ 3 ஃபோர், 3 சிக்ஸ் அடித்து இருந்தார். கடைசி மூன்று ஓவர்களில் 7 ரன்கள் எடுத்தால் போதும் என்ற நிலையில் ஷாலோ மூன்றே பந்துகளில் ஒரு ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்து வெற்றிக் கோட்டை எட்ட வைத்து குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, May 24, 2020, 17:26 [IST]
Other articles published on May 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+