Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருய்யா இந்த மலோனி? 5.4 ஓவரில் மொத்த மேட்ச்சையும் முடித்து.. மிரள வைத்த அதிரடி வீரர்!

கிங்ஸ்டவுன் : கொரோனா வைரஸை தூக்கி ஓரமாகப் போட்டுவிட்டு நடத்தப்பட்டு வரும் வின்சி பிரீமியர் லீக் எனும் டி10 கிரிக்கெட் தொடரில் 5.4 ஓவரில் சேஸிங்கை முடித்தார் மலோனி என்ற அதிரடி வீரர்.

கொரோனா வைரஸ் பரவலால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் தடைபட்டுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ்-இல் உள்ள செயின்ட் வின்சென்ட் அண்ட் கிரெனடின்ஸ் நாட்டில் டி10 எனும் பத்து ஓவர் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த தொடரின் இரண்டாவது போட்டியில் தான் மலோனி அதிரடி ஆட்டம் ஆடினார்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

வின்சி பிரீமியர் லீக் டி10 போட்டிகள் தொடரின் முதல் போட்டியில் கிரெனடின்ஸ் டைவர்ஸ் அணியை வீழ்த்தியது சால்ட் பான்ட் ப்ரேக்கர்ஸ் அணி. அந்தப் போட்டியில் இரு அணிகளும் அதிரடி ஆட்டம் ஆடவில்லை. அதனால் ரசிகர்கள் சோர்ந்து போன நிலையில், இரண்டாவது டி10 போட்டி துவங்கியது.

பொட்டானிக் கார்டன் சொதப்பல்

பொட்டானிக் கார்டன் சொதப்பல்

லா சூஃப்ரேர் ஹைக்கர்ஸ் - பொட்டானிக் கார்டன் ரேஞ்சர்ஸ் அணிகள் இடையே இரண்டாவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பொட்டானிக் கார்டன் அணி பேட்டிங் ஆடியது. அந்த அணியில் எந்த பேட்ஸ்மேனும் பெரிதாக ரன் குவிக்கவில்லை.

கேஸ்ரிக் வில்லியம்ஸ் தான் அதிகம்

கேஸ்ரிக் வில்லியம்ஸ் தான் அதிகம்

கேஸ்ரிக் வில்லியம்ஸ் 16 பந்தில் 15 ரன்கள் எடுத்ததே அந்த அணியில் ஒரு பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ரன். (கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விராட் கோலியை வம்பிழுத்தாரே.. அவரே தான்!). மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களே எடுத்தனர்.

மெய்டன் ஓவர்

மெய்டன் ஓவர்

10 ஓவர்கள் முடிவில் பொட்டானிக் கார்டன் அணி 70 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஓ.லீவிஸ் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு இரண்டு ஓவர்களில் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தர். அவர் ஒரு மெய்டன் ஓவர் வீசி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

துவக்கம்

துவக்கம்

அடுத்து 71 ரன்கள் என்ற இலக்கை நோக்கி லா சூஃப்ரேர் ஹைக்கர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணிக்கு அபார துவக்கம் அளித்தது சல்வான் பிரவுன் - டெஸ்ரான் மலோனி ஜோடி. பிரவுன் 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். அவர் 5வது ஓவரின் முடிவில் ஆட்டமிழந்தார்.

லா சூஃப்ரேர் வெற்றி

லா சூஃப்ரேர் வெற்றி

ஆறாவது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்த மலோனி தன் அணியை 5.4 ஓவரில் வெற்றி பெற வைத்தார். லா சூஃப்ரேர் அணி 71 ரன்கள் வெற்றி இலக்கை 5.4 ஓவரில் எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருந்தது.

மலோனி அதிரடி ஆட்டம்

மலோனி அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம் ஆடிய டெஸ்ரான் மலோனி 20 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். 4 ஃபோர், 3 சிக்ஸ் அடித்து தெறிக்க விட்டார். வின்சி பிரீமியர் லீக் தொடரின் முதல் அதிரடி ஆட்டம் இவருடையது தான். இந்த வெற்றியின் மூலம் லா சூஃப்ரேர் அணி 2 புள்ளிகள் பெற்றது.

Story first published: Saturday, May 23, 2020, 14:31 [IST]
Other articles published on May 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+