Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10 ஓவரில் 132 ரன்.. விக்கெட்டே விழாமல் வெறியாட்டம் ஆடிய ஜோடி.. சிக்ஸர் மழை!

கிங்ஸ்டவுன் : வின்சி பிரீமியர் லீக் தொடரில் விக்கெட்டே விழாமல் வெறியாட்டம் ஆடிய துவக்க ஜோடி 10 ஓவரில் 132 ரன்கள் குவித்தது.

வின்சி பிரீமியர் லீக் எனும் 10 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் செயின்ட் வின்சென்ட் அண்ட் கிரெனடின்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது.

அந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். அந்த தொடரில் நேற்று மூன்று லீக் போட்டிகள் நடைபெற்றன.

முதல் போட்டி

முதல் போட்டி

நேற்று முதலில் நடந்த போட்டியில் டார்க் வியூ எக்ஸ்ப்ளோரர்ஸ் - பொட்டானிக் கார்டன் ரேஞ்சர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பொட்டானிக் கார்டன் அணி முதலில் 104 ரன்கள் குவித்தது. டார்க் வியூ அணி 88 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஃபோர்ட் சார்லட் - கிரெனடின்ஸ் டைவர்ஸ்

ஃபோர்ட் சார்லட் - கிரெனடின்ஸ் டைவர்ஸ்

அடுத்து நடந்த போட்டியில் ஃபோர்ட் சார்லட் ஸ்ட்ரைக்கர்ஸ் - கிரெனடின்ஸ் டைவர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கிரெனடின்ஸ் டைவர்ஸ் அணி 114 ரன்கள் குவித்தது. ஆசிப் ஹூப்பர் 35 பந்துகளில் 59 ரன்கள் குவித்தார்.

போப் போராட்டம் வீண்

போப் போராட்டம் வீண்

அடுத்து ஆடிய ஃபோர்ட் சார்லட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 10 ஓவர்களில் 92 ரன்கள் மட்டுமே எடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த அணியின் போப் மட்டுமே தனி ஆளாக போராடி 30 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார்.

132 ரன்கள் குவித்த போட்டி

132 ரன்கள் குவித்த போட்டி

இதை அடுத்து நடந்த மூன்றாவது போட்டியில் தான் சால்ட் பான்ட் ப்ரேக்கர்ஸ் அணி 10 ஓவர்களில் 132 ரன்கள் குவித்தது. லா சூஃப்ரேர் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சால்ட் பான்ட் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

அந்த அணிக்கு சுனில் ஆம்ப்ரிஸ் - காதிர் நெட் துவக்கம் அளித்தனர். இருவரும் துவக்கம் முதல் அதிரடி ஆட்டம் ஆடினர். விக்கெட் விழாமல் அவர்கள் ஆடியதால் லா சூஃப்ரேர் அணி திணறியது. ஒவ்வொரு ஓவரும் குறைந்தது இரண்டு பவுண்டரிகள் சென்றன.

சுனில் ஆம்ப்ரிஸ் அதிரடி

சுனில் ஆம்ப்ரிஸ் அதிரடி

சுனில் ஆம்ப்ரிஸ் 40 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். அவர் 8 ஃபோர், 4 சிக்ஸர் அடித்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 187ஆக இருந்தது. இவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். காதிர் நெட்-உம் அரைசதம் எட்டினார்.

காதிர் நெட் அரைசதம்

காதிர் நெட் அரைசதம்

காதிர் நெட் 22 பந்துகளில் சரியாக 50 ரன்கள் குவித்து கடைசி வரை விக்கெட் இழக்காமல் களத்தில் நின்றார். இவர் 5 ஃபோர், 3 சிக்ஸர் விளாசி இருந்தார். 10 ஓவர்களில் 132 ரன்கள் என்ற மிகப் பெரிய ஸ்கோரை எட்டியது சால்ட் பான்ட் அணி.

மலோனி டக் அவுட்

மலோனி டக் அவுட்

அடுத்து சேஸிங் செய்த லா சூஃப்ரேர் அணிக்கு மலோனி டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். முதல் போட்டியில் தன் அதிரடி ஆட்டத்தால் அசர வைத்த மலோனி, இந்தப் போட்டியில் பெரிதாக ரன் குவித்தால் மட்டுமே இத்தனை பெரிய இலக்கை சேஸிங் செய்ய முடியும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

சால்ட் பான்ட் வெற்றி

சால்ட் பான்ட் வெற்றி

ஆனால், மலோனி இரண்டாம் ஓவரில் ஆட்டமிழந்த உடனேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது. தில்லான் டக்ளஸ் போராடி 30 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். டீன் பிரவுன் 20 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். 10 ஓவர்களில் லா சூஃப்ரேர் அணி 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. சால்ட் பான்ட் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Monday, May 25, 2020, 12:00 [IST]
Other articles published on May 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+