Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 ஓவரில் 2 ரன் எடுத்து வெறுப்பேற்றிய வீரர்.. மொத்த மேட்ச்சே 10 ஓவர் தான்.. கடுப்பான ரசிகர்கள்!

கிங்ஸ்டவுன் : வின்சி பிரீமியர் லீக் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில் ஒரு வீரர் சேஸிங்கில் இரண்டு ஓவர்களில் வெறும் 2 ரன்கள் எடுத்து தன் அணியை தோல்வி அடைய வைத்தார்.

வின்சி பிரீமியர் லீக் எனும் பத்து ஓவர் போட்டிகள் கொண்ட டி10 தொடர் செயின்ட் வின்சென்ட் அண்ட் கிரெனடின்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சிலரும் பங்கேற்றுள்ளனர். லீக் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

ஐந்தாவது போட்டி

ஐந்தாவது போட்டி

இந்த தொடரின் ஐந்தாவது போட்டியில் ஃபோர்ட் சார்லட் ஸ்ட்ரைக்கர்ஸ் - சால்ட் பான்ட் ப்ரேக்கர்ஸ் அணிகள் மோதின. முதலாவதாக சால்ட் பான்ட் ப்ரேக்கர்ஸ் அணி பேட்டிங் ஆடியது. அந்த அணியின் வாக்கர் 4 பந்துகள் சந்தித்து டக் அவுட் ஆனார்.

மோசமான நிலை

மோசமான நிலை

சால்ட் பான்ட் அணி 1.2 ஓவரில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து 1 விக்கெட் இழந்து மோசமான நிலையில் இருந்தது. ஹெக்டார் 11 பந்தில் 10 ரன்கள் எடுத்தார். சுனில் ஆம்ப்ரிஸ் 20 பந்துகளில் 29 ரன்கள் குவித்தார், உர்னேல் தாமஸ் டக் அவுட் ஆனார்.

வெஸ்ரிக் ஸ்ட்ரோ அதிரடி

வெஸ்ரிக் ஸ்ட்ரோ அதிரடி

இறுதியில் ஜான்சன் 10 பந்துகளில் 20 ரன்கள் குவித்தார். வெஸ்ரிக் ஸ்ட்ரோ கடைசி இரண்டு ஓவர்களில் பேட்டிங் செய்தார். அவர் 9வது மற்றும் 10வது ஓவரின் கடைசி பந்தை மட்டுமே சந்தித்தார். அதில் ஒரு ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து மிரட்டினார்.

சால்ட் பான்ட் ஸ்கோர்

சால்ட் பான்ட் ஸ்கோர்

வெஸ்ரிக் ஸ்ட்ரோ 2 பந்துகளில் 10 ரன்கள் எடுக்க ஸ்கோர் அதிரடியாக உயர்ந்தது. 10 ஓவர்களில் சால்ட் பான்ட் ப்ரேக்கர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் குவித்தது. அடுத்து ஃபோர்ட் சார்லட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி சேஸிங் செய்யத் துவங்கியது.

வெறுப்பேற்றிய ஸ்காட்

வெறுப்பேற்றிய ஸ்காட்

ஃபோர்ட் சார்லட் அணிக்கு போப் மற்றும் ஸ்காட் துவக்கம் அளித்தனர். ஸ்காட்டால் பந்தை அடிக்க முடியவில்லை. அவர் பேட்டை வைத்து காற்றை அடித்து ரசிகர்களை மோசமாக வெறுப்பேற்றினார். 12 பந்துகளை சந்தித்த அவர் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

2 ஓவர்கள் காலி

2 ஓவர்கள் காலி

10 ஓவர் போட்டியில் 2 ஓவர்களை வீணடித்தார் ஸ்காட். அடுத்து வந்த கேப்டன் காட்டோய் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். வில்லியம்ஸ் 8, போப் 13 ரன்கள் எடுத்தனர். ஸ்டோவ் 8 பந்துகளில் 18 ரன்கள் குவித்தார். முடிவில் அந்த அணி 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சால்ட் பான்ட் வெற்றி

சால்ட் பான்ட் வெற்றி

ஸ்காட் வீணடித்த இரண்டு ஓவர்களால் ஃபோர்ட் சார்லட் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சால்ட் பான்ட் ப்ரேக்கர்ஸ் அணி எளிதாக வெற்றி பெற்றது. இது அந்த அணி தொடர்ந்து பெறும் இரண்டாவது வெற்றி ஆகும்.

Story first published: Sunday, May 24, 2020, 16:47 [IST]
Other articles published on May 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+