For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Coronavirus : உலகமகா நடிப்பு! இந்தியாவிடம் உதவி கேட்ட பாக். பிரபலம்.. கிழித்து தொங்கவிட்ட ரசிகர்கள்!

டெல்லி : முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் சமீபத்தில் இந்தியா, பாகிஸ்தான் நாட்டிற்கு 10,000 வெண்டிலேட்டர் கொடுத்தால் அதை மறக்க மாட்டோம் என கூறி இருந்தார்.

ஆனால், இதே சோயப் அக்தர் கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவில் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது அதை காஷ்மீர் விவகாரத்துடன் முடிச்சு போட்டு பேசி இருந்தார்.

வர்றியா.. யாருகிட்ட ஜாஸ்தியா இருக்குன்னு பார்ப்போமா? கிரிக்கெட்டுடன் நேருக்கு நேர் மோதிய WWE!வர்றியா.. யாருகிட்ட ஜாஸ்தியா இருக்குன்னு பார்ப்போமா? கிரிக்கெட்டுடன் நேருக்கு நேர் மோதிய WWE!

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

சோயப் அக்தர் மிகச் சில நாட்களில் இந்தியாவை விமர்சித்து பேசி விட்டு, பின் இந்தியாவிடமே உதவி கேட்டு இருப்பதை இந்திய ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், அவர் இந்தியா - பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடத்தி நிதி திரட்ட வேண்டும் எனவும் கூறியதையும் பற்றி ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

தண்டனை

தண்டனை

சோயப் அக்தர் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் துவங்கிய போது அதை காஷ்மீர் விவகாரம், ஆர்ட்டிகிள் 370 ஆகியவற்றுக்கு இந்தியாவுக்கு கிடைத்த தண்டனை என குறிப்பிட்டு லாக்டவுன் எப்படி இருக்கிறது என ட்வீட் போட்டு இருந்தார்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

ஆனால், அதன் பின் கொரோனா வைரஸ் பாகிஸ்தான் நாட்டையும் கடுமையாக பாதித்தது. தற்போது இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளிலும் பல ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கையும் நூறை தாண்டி சென்று கொண்டுள்ளது.

லாக்டவுன் அறிவிப்பு

லாக்டவுன் அறிவிப்பு

இந்த நிலையில், இரு நாட்டிலும் லாக்டவுன் விதிகள் அமலில் உள்ளன. மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல கட்டுப்பாடு உள்ளது. இரு நாடுகளும் மருத்துவ வசதிகளை உயர்த்திக் கொள்வதில் மும்முரமாக உள்ளது.

வெண்டிலேட்டர் வேண்டும்

வெண்டிலேட்டர் வேண்டும்

கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடையும் நோயாளிகள் சுவாசிக்க சிரமம் கொள்கின்றனர். அப்போது அவர்களுக்கு வெண்டிலேட்டர் உதவி அவசியம் தேவை. அந்த உபகரணம் பாகிஸ்தான் நாட்டில் மிக மிகக் குறைவாக உள்ளது.

உதவி கேட்ட அக்தர்

உதவி கேட்ட அக்தர்

இந்தியாவிலும் குறைவாக இருந்தாலும், வேகமாக வெண்டிலேட்டர் உற்பத்தி செய்து அதை இந்தியா சமாளிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் தான் சோயப் அக்தர் இந்தியா 10,000 வெண்டிலேட்டர் அளித்தால், பாகிஸ்தான் அந்த உதவியை எப்போதும் மறக்காது என கூறி இருந்தார்.

ட்விட்டரில் விமர்சனம்

ட்விட்டரில் விமர்சனம்

சோயப் அக்தர் இந்தியாவை விமர்சித்து பேசி விட்டு, பின் இந்தியாவிடமே வெண்டிலேட்டர் கேட்டு இருப்பதை கண்ட இந்திய ரசிகர்கள் கடுமையாக ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகின்றனர். பலரும் அவர் இரண்டே வாரத்தில் இந்தியா குறித்த தன் பார்வையை மாற்றிக் கொண்டதை விளாசி வருகின்றனர்.

வேகம் அதிகம்

வேகம் அதிகம்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் கார்களை மாற்றும் வேகத்தை விட, அக்தர் இந்தியா குறித்த தன் பார்வையை மாற்றும் வேகம் அதிகமாக உள்ளதாக ஒருவர் கூறி உள்ளார். சிலர் அக்தர் நன்றாக நடிப்பதாக கூறி உள்ளனர். அதே போல, அவர் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடத்தி நிதி திரட்ட வேண்டும் என கூறியதையும் விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Friday, April 10, 2020, 19:10 [IST]
Other articles published on Apr 10, 2020
English summary
Shoaib Akhtar request for 10000 ventilators receives strong criticism from Indian fans
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X