Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC FINAL:நியூசிலாந்துக்கே சாதகமான சூழல்..அடித்துக்கூறும் விவிஎஸ் லக்‌ஷ்மண்..பிட்ச்-ல் இருக்கும் அந்த பிரச்னை!

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இந்திய அணிக்கு பிரச்னை மிகுந்ததாக தான் இருக்கும் என முன்னாள் வீரர் விவிஎஸ். லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நெருங்கிவிட்டது.

இதனால் போட்டி நடைபெறவிருக்கும் பிட்ச் குறித்து அணிகளின் பலம் குறித்தும் ரசிகர்கள் பேசத்தொடங்கிவிட்டனர்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ம் தேதி முதல் இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடைபெறவுள்ளது. இதற்காக 24 பேர் கொண்ட இந்திய அணி கடந்த ஜூன் 3ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. தற்போது அவர்கள் ரோஸ் பவுல் மைதான ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னும் பயிற்சியை கூட தொடங்கவில்லை. ஆனால் நியூசிலாந்து அணி முன்கூட்டியே இங்கிலாந்து சென்று, அந்நாட்டு அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

சாதகம்

சாதகம்

இந்நிலையில் இந்த போட்டி நியூசிலாந்துக்கே சாதகமாக இருக்கும் என விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், அயல்நாட்டில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை, அந்த களத்தில் குறைந்தது ஒரு போட்டியில் விளையாடினால் மட்டுமே பிட்ச் பழக்கப்படும். ஆனால் நியூசிலாந்து 2 போட்டிகள் விளையாடுவதால் அவர்களுக்கு பிட்ச் சுலபமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. குறிப்பாக பேட்ஸ்மேன்களுக்கு அது எளிதானதாக இருக்கும்.

இந்தியாவின் பலம்

இந்தியாவின் பலம்

ஆனால் இந்திய அணியும் எந்த வகையிலும் குறைந்தது இல்லை. அவர்கள் எத்தனை சவால்களை எதிர்கொண்டாலும், அதில் இருந்து மீண்டு வந்துவிடுவார்கள். இந்திய வீரர்களின் நம்பிக்கைக்கும், திறமைக்கும் ஆஸ்திரேலிய தொடர் ஒரு உதாரணம். இங்கிலாந்தில் அவர்கள் மேற்கொள்ளும் பயிற்சி ஆட்டங்களே சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என நினைக்கிறேன் எனத்தெரிவித்துள்ளார்.

பவுலிங்

பவுலிங்

இங்கிலாந்து களமானது வேகப்பந்துவீச்சுக்கு மிகுந்த உதவியாக இருக்கிறது. இங்கு பேட்டிங்கை விட பவுலிங் தான் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமையும் எனக்கூறப்படுகிறது. அந்த வகையில், இந்திய அணியில் முகமது ஷமி, இஷாந்த் சர்மா போன்ற அனுபவ வீரர்களுடன், தற்போது சிறந்த பவுலராக இருக்கும் பும்ராவும் இருப்பதால் இந்திய அணி அசத்த வாய்ப்புள்ளது.

Story first published: Saturday, June 5, 2021, 20:10 [IST]
Other articles published on Jun 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+