Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

துவக்க ஆர்டர்ல ஆடறதுக்கான தீவிரம் இருக்கு... யாரப்பத்தி சொல்லியிருக்காரு லஷ்மன்?

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி தன்னை நிரூபித்துள்ளார் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்

சிறப்பான ஆல்-ரவுண்டர் திறமைகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார். விக்கெட்டுகளை ஒருபக்கம் குவித்த அவர், கடந்த போட்டியில் 96 ரன்களை அடித்து சதத்தை தவறவிட்டுள்ளார்.

இந்நிலையில் துவக்க ஆர்டரில் விளையாடுவதற்கான தீவிரம் வாஷிங்டன் சுந்தருக்கு உள்ளதாக முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிறப்பான சுந்தர்

சிறப்பான சுந்தர்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் சிறப்பான பௌலிங்கை மட்டுமின்றி பேட்டிங்கையும் வெளிப்படுத்தியுள்ளார் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர். கடந்த 4வது டெஸ்ட் போட்டியில் 96 ரன்களை அடித்து சதத்தை தவறவிட்டுள்ளார்.

அதிகரித்த அணியின் ஸ்கோர்

அதிகரித்த அணியின் ஸ்கோர்

ஆயினும் அவரது இந்த ஸ்கோர் அணியின் சிறப்பான வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. முதலில் பந்த் பின்பு அக்சருடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் அவர் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதையடுத்து முதல் இன்னிங்சில் இந்திய அணியின் ரன் அதிகரித்தது.

சுந்தரின் தீவிரம்

சுந்தரின் தீவிரம்

இந்நிலையில் துவக்க ஆர்டரில் ஆடும் தீவிரம் வாஷிங்டன் சுந்தருக்கு உள்ளதாக முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மன் பாராட்டு தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்சிற்காக பேசிய அவர், சுந்தரின் ஆல்-ரவுண்டர் திறமை குறித்தும் புல் -ஷாட்களை அவர் எதிர்கொள்ளும் விதம் குறித்தும் லஷ்மன் பாராட்டியுள்ளார். அவர் ஒரு முழுமையான வீரர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வாய்ப்புகள் கிடைக்கும்

வாய்ப்புகள் கிடைக்கும்

முன்னதாக 6ம் தேதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றியை அடுத்து வாஷிங்டன் சுந்தரின் ஆட்டம் குறித்து லஷ்மன் தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருந்தார். அவர் தனது சதத்தை தவறவிட்டது குறித்து வருத்தம் தெரிவித்த லஷ்மன், சுந்தர் மேலும் பல சதங்களை அடிக்க அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் பாராட்டு தெரிவித்திருந்தார்.

Story first published: Monday, March 8, 2021, 18:17 [IST]
Other articles published on Mar 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+