Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை : கொரோனாவால் பாதிக்கப்பட்ட டிராவிட்.. பிசிசிஐ-ன் அவசர முடிவு.. மாற்று திட்டம் என்ன?

மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

India அணியின் Top Order பற்றி Ricky Ponting கருத்து *Cricket

ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ள ஆசிய கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது.

இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட அணி தீவிரமாக தயாராகி வருகிறது.

 கொரோனா உறுதி

கொரோனா உறுதி

இன்னும் ஒரு வார காலம் மட்டுமே இருக்கும் சூழலில் இந்தியாவுக்கு இன்று பெரும் அடி விழுந்தது. தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்த இந்திய அணி இன்று அமீரகம் புறப்பட்டு சென்றது. ஆனால் டிராவிட் மட்டும் கொரோனா அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மாற்று பயிற்சியாளர்

மாற்று பயிற்சியாளர்

ராகுல் டிராவிட் இல்லாமல் இந்திய அணி எப்படி சமாளிக்கும் என்ற குழப்பம் இருந்தது. இந்நிலையில் டிராவிட்டிற்கு மாற்றாக வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிராவிட் மற்றும் லக்‌ஷ்மண் ஆகியோருக்கு ஒரே மாதிரியான வியூகங்கள் மற்றும் சிந்தனைகள் இருப்பதால் பெரிய வித்தியாசம் இருக்காது.

ஜிம்பாப்வே தொடர்

ஜிம்பாப்வே தொடர்

இந்திய அணி சமீபத்தில் ஜிம்பாப்வேவுடன் விளையாடிய 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் வைட் வாஷ் செய்தது. இதில் இந்தியாவின் பயிற்சியாளராக லக்‌ஷ்மண் தான் செயல்பட்டிருந்தார். எனவே லக்‌ஷ்மணுக்கு அங்கிருந்து நேரடியாக அமீரகம் செல்வதற்கான விசா பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தானுடனான போட்டி

பாகிஸ்தானுடனான போட்டி

டிராவிட் தற்போது பெங்களூருவில் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். பெரும்பாலும் ஒரு வாரத்திற்குள் பூரண குணமடைந்துவிடுவார் என்பதால், கொரோனா நெகட்டீவ் ஆன பின் இந்திய அணியுடன் இணைந்துக்கொள்வார். இந்திய அணி வரும் ஆகஸ்ட் 28ம் தேதி பாகிஸ்தானுடன் மோதும் போட்டிக்குள் டிராவிட் இணைவாரா என்பது சந்தேகம் தான்.

Story first published: Tuesday, August 23, 2022, 14:52 [IST]
Other articles published on Aug 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+