Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாங்கள் சொன்னதை கும்ப்ளே கேட்கவில்லை.. கோலி - கும்ப்ளே சர்ச்சை பற்றி பேசிய விவிஎஸ் லக்ஷ்மன்

மும்பை: விராட் கோலி - அனில் கும்ப்ளே இடையே நடந்த கசப்பான சம்பவங்கள் குறித்து அதில் சம்பந்தப்பட்ட விவிஎஸ் லக்ஷ்மன் பேசியுள்ளார்.

கடந்த வருடம் அனில் கும்ப்ளேவை பயிற்சியாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்தார் கோலி. இது கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது பற்றி லக்ஷ்மன் தன் கருத்துக்களை தெரிவித்தார்.

கும்ப்ளேவை கோலிக்கு பிடிக்கவில்லை

கும்ப்ளேவை கோலிக்கு பிடிக்கவில்லை

கடந்த 2016இல் விவிஎஸ் லக்ஷ்மன், கங்குலி, சச்சின் அடங்கிய கிரிக்கெட் அட்வைசரி கமிட்டி, அனில் கும்ப்ளேவை தேசிய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக நியமித்தது. ஆனால், கோலி அதை விரும்பவில்லை. சாம்பியன்ஸ் ட்ராபி சமயத்தில் இது பெரிய பிரச்சனையாக வெடித்தது.

இது கசப்பான அனுபவம்

இது கசப்பான அனுபவம்

அதன் பின்னர் அனில் கும்ப்ளே ராஜினாமா செய்தார். கோலி தனக்கு பிடித்த ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக நியமிக்க வைத்தார். கோலி - அனில் கும்ப்ளே சம்பவம் ஒரு கசப்பான அனுபவமாக இருந்ததாக கூறியுள்ளார் லக்ஷ்மன்.

தொடர வேண்டும் என நினைத்தோம்

தொடர வேண்டும் என நினைத்தோம்

"நாங்கள் கிரிக்கெட் அட்வைசரி கமிட்டியில் அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பதவியில் தொடர வேண்டும் என நினைத்தோம். ஆனால், அவர் வெளியேறுவது தான் சரியான முடிவு என நினைத்தார்" என அப்போது நடந்த சம்பவம் குறித்து கூறினார் லக்ஷ்மன்.

கும்ப்ளேவுக்கு பின் இந்திய அணி

கும்ப்ளேவுக்கு பின் இந்திய அணி

தற்போது ரவி சாஸ்திரி - கோலி சேர்ந்து இந்திய அணியை தங்கள் விருப்பப்படி மாற்றிக் கொள்கிறார்கள். அணித் தேர்வும் சரியாக இல்லை. நல்ல வீரர்கள் இருந்தும் தவறான அணித் தேர்வால் இந்தியா சில வெல்ல வேண்டிய போட்டிகளில் கூட தோல்வி அடைகிறது.

Story first published: Saturday, December 22, 2018, 16:18 [IST]
Other articles published on Dec 22, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+